அம்பை - 17 (நெல்)
அம்பை - 17 ASD 17 |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
ஏடிடீ-31, ரத்னா, ஏஎஸ்பீ-8 & ஐஆர்-8 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
100 - 105 நாட்கள் |
மகசூல் |
5400 கிலோஎக்டேர் |
வெளியீடு |
1989 |
வெளியீட்டு நிறுவனம் |
TNAU, அம்பாசமுத்திரம் |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
அம்பை - 17 (ASD 17) எனப்படும் இந்த நெல் வகை, ஆடுதுறை - 31, ரத்னா, ஏ எஸ் பீ - 8, மற்றும் ஐ ஆர் - 8 (ADT 31 / Rathna / ASP 8 / IR 8) என நான்கு நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
வெளியீடு
[தொகு]தமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram),[2] 1989 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[3]
காலம்
[தொகு]குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 100 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற குறுங்கால நெற்பயிர்கள், நவரை, சொர்ணவாரி, கார், குறுவை, மற்றும் பின்தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[4]
சாகுபடி
[தொகு]நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 17 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]
சிறப்புப் பண்புகள்
[தொகு]- இந்த நெல் இரகம், ஒரு ஏக்கருக்கு 5400 கிலோவரை (5.4 t/ha) மகசூல் தரக்கூடியது.
- இவ்வகை, நேரடி விதைப்பு முறைக்கு மிகவும் ஏற்றது.
- இந்நேல்லின் அரிசி, சிவப்பு நிறத்தில் குறுகிய குண்டு வடிவில் காணப்படுகிறது.
- இந்த நெல்லை சாகுபடி செய்ய, கார், மற்றும் பின் பிசாணம் போன்ற பருவங்கள் மிகவும் உகந்தது.[1][2]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ இங்கு மேலே தாவவும்: 1.0 1.1 1.2 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). © CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-10.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ இங்கு மேலே தாவவும்: 2.0 2.1 2.2 "Rice Knowledge Management Portal ASD 17". www.rkmp.co.in (ஆங்கிலம்). © 2011. Archived from the original on 2020-08-11. பார்க்கப்பட்ட நாள் 2017-08-10.
{{cite web}}
: Check date values in:|date=
(help); Unknown parameter|dead-url=
ignored (help) - ↑ CROP VARIETIES RELEASED BY THE - TAMIL NADU AGRICULTURAL UNIVERSITY FROM 1971 to 2003 - I. AGRICULTURE
- ↑ "Paddy Varieties of Tamil Nadu". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்). © TNAU 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-09.
{{cite web}}
: Check date values in:|date=
(help); Text "Long duration varieties" ignored (help)