உள்ளடக்கத்துக்குச் செல்

குதிரைவால் சம்பா (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குதிரைவால் சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
130 - 140 நாட்கள்
மகசூல்
1300 கிலோ 1 ஏக்கர்
தோற்றம்
பண்டைய நெல் இரகம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

குதிரைவால் சம்பா (Kudhiraival Samba) எனப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் இரகமாகும். தமிழகத்தின் திருச்சி மாவட்டத்திலுள்ள செக்கணம் ஊராட்சிக்கு உட்பட்ட ‘கம்பளத்துப்பட்டி’ வட்டாரங்களில் அதிகளவில் பயிரிடப்படுவதாக கருதப்படும் இது, ஒரு ஏக்கருக்கு சுமார் 1. 3 டன்கள் மகசூல் கொடுக்கக்கூடியதாக உள்ளது.[1]

பருவகாலம்

[தொகு]

சுமார் 140 - 150 நாட்கள் மொத்தப் பயிர்க்கால அளவுடைய இதன் நெற்பயிர்கள், மத்தியகால மற்றும், நீண்டகால நெற்பயிர்கள் சாகுபடி செய்யக்கூடிய ஆகத்து மாதம் தொடங்கும் சம்பாப் பருவம் ஏற்றதாக கூறப்படுகிறது. மேலும் இப்பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவதாக அறியப்படுகிறது.[2]

  • குதிரைவால் சம்பா நெற்பயிர்கள், பூச்சிகள் மற்றும் நோய்களை எதிர்க்கும் திறன் கொண்டதோடு, இதன் பயிர்த்தண்டுகள் சாயும் தன்மையற்று உள்ளது.[1]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Traditional Varieties grown in Tamil nadu - Kuthiraival Samba". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-01-27.
  2. பாரம்பரிய நெல் வகைப் பட்டங்கள் |கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]