அரியான் (நெல்)
அரியான் |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
115 - 120 நாட்கள் |
மகசூல் |
2000 - 2100 கிலோ, 1 எக்டேர் |
தோற்றம் |
பண்டைய நெல் வகை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
அரியான் (Ariyaan) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள, மணற்பாங்கானப் பிராந்தியமாகக் காணப்படும் ரெகுநாதபுரம் பகுதிகளில் பிரதானமாக விளைவிக்கக்கூடிய இந்நெற்பயிர், நீர்நிலைகளின் கரையோர மணல் கலந்த மண் இதற்கு மிகவும் ஏற்றது.[1]
பருவம்
[தொகு]நான்கு வகையான அரியான் நெற்பயிர்களும், பொதுவாக நவரை பட்டமான ஒக்டோபர் மாதம் முதல், நவம்பர் மாதம் முடிய உள்ள (ஐப்பசியில்) விதைத்து, சனவரியில் (தையில்) அறுவடைச் செய்யபடுகிறது.[1] மேலும் இதேப் பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.[2]
காலம்
[தொகு]குறுகியக் கால நெற்பயிரான இது, 120 நாட்களில் வறட்சியைத் தாங்கி மிக உயரமாக 5,½ - 6,½ அடி வரையில் வளரக்கூடிய இந்த நெல் இரகம், கடலோரப்பகுதிகளிலும், மற்றும் ஆற்றுப்படுகைகளிலும் காணப்படும் மணற்பாங்கான நிலங்களில் நன்கு செழிக்கும்.
மகசூல்
[தொகு]ஒரு ஏக்கருக்கு 2000 - 2100 கிலோ வரையிலும் மகசூல் கிடைப்பதாக கருதப்படும் இந்த வகை நெற்பயிருக்கு, முதல் 3 மாதகால இடையில் ஒருமுறை மழையிலேயே சிறந்த மகசூலை தரக்கூடியதாகும்.[1]
குறிப்புகள்
[தொகு]- அரியான் நெல் வகையில், (அ) வெள்ளை அரியான் (ஆ) கருப்பு அரியான் (இ) சிவப்பு அரியான் மற்றும் (ஈ) வாழை அரியான் என நான்கு வகைகள் உள்ளன.
- அரியான் நெல் வகை அறுவடையை, முதலில் மேற்புற நெற்கதிர்களையும், இரண்டாவது நடுவக வைக்கோலையும், பிறகு அடித்தண்டு என மூன்று நிலைகளில் அறுவடை செய்யப்படுகிறது.
- இவ்வகை நெற்பயிர்கள், இலை சுருட்டுப் புழுக்களாலும, தண்டு துளைப்பான் பூசிக்களாலும் எளிதில் பாதிக்கக்கூடிய நெற்பயிர் எனக் கூறப்படுகிறது.[1]
இவற்றையும் காண்க
[தொகு]- பாரம்பரிய நெல்
- இலங்கையின் பாரம்பரிய அரிசி
- இயற்கை வேளாண்மை
- வேளாண்மை
- தமிழ்நாடு நெல் வகைகளின் பட்டியல்
- தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல்
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Traditional Varieties grown in Tamil nadu - Ariyaan". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2014 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-02-08.
- ↑ பாரம்பரிய நெல் வகைப் பட்டங்கள் |கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]