சண்டி கார் (நெல்)
Appearance
சண்டி கார் |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
155 - 162 நாட்கள் |
மகசூல் |
ஏக்கருக்கு சுமார் 800 கிலோ |
தோற்றம் |
பண்டைய நெல் இரகம் |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
சண்டிகார் (Sandikkar) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனுமந்தக்குடி எனும் நாட்டுப்புற பகுதியில் அதிகளவில் பயிரிடப்படுவதாக கருதப்படும் இது, ஒரு ஏக்கருக்கு 800 கிலோ நெல் தானியமும், 1800 கிலோ வைக்கோலும் தரக்கூடியது.[1]
பருவகாலம்
[தொகு]சனவரி மாதம் தொடங்கும் நவரைப் பருவமும், மற்றும் செப்டம்பர் மாதம் தொடங்கும் பின் சம்பா பருவமும், இந்த நெற்பயிருக்கு ஏற்றதாக கூறப்படுகிறது.[1] மேலும் இப்பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவதாக அறியப்படுகிறது.[2]
வளருகை
[தொகு]நேரடி விதைப்பு மற்றும் நாற்று நடவு முறைக்கும் ஏற்றதாக உள்ள இவ்வகை நெற்பயிர், கரிசல் மற்றும் செம்மண் போன்ற நிலப்பகுதிகளில் செழித்து வளரக்கூடிய நெல் இரகமாகும்.[1]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Traditional Varieties grown in Tamil nadu – Chandikaar". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2014 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-01-31.
- ↑ பாரம்பரிய நெல் வகைப் பட்டங்கள் |கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]