உள்ளடக்கத்துக்குச் செல்

டி - 23 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி - 23 (T-23) என்பது; 1975 ஆம் அறிமுகப்படுத்தப்பட்ட, நீண்டகால நெல் வகையாகும்.[1] 150 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், “கலா சுகதாஸ்”[2] எனும் நெல் வகையிலிருந்து தெரிவு செய்யப்பட்டதாகும். நீர்ப்பாசன வசதியுடனான மேட்டுநிலப் பகுதிகளில் நன்கு வளரக்கூடிய இந்த நெற்பயிர், உயரமாகவும், இதன் நெல் தானியங்கள் பெரிய அளவிலும், மற்றும் நறுமணமும் உடையதாக உள்ளது. ஒரு எக்டேருக்கு சுமார் 3000 - 3500 கிலோ (30-35 Q/ha) மகசூல் தரவல்ல இது, உத்தரப் பிரதேசம், மற்றும் இமாச்சலப் பிரதேசம், போன்ற மாநிலங்களில் பெருமளவில் பயிரிடப்படுகின்றது.[3]

சான்றுகள்

[தொகு]
  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Non-Basmati aromatic :". Archived from the original on 2016-08-16. பார்க்கப்பட்ட நாள் 2017-04-01.
  3. "Details of Rice Varieties : Page 1 - 23 - T-23". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-04-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி_-_23_(நெல்)&oldid=3556490" இலிருந்து மீள்விக்கப்பட்டது