உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதி (பி டி பி - 41) (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரதி (பி டி பி - 41) (Bharthi (PTB-41) எனப்படும் இது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும்.[1] 120 - 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், பி டி பி - 10 (PTB-10), ஐ ஆர் 8 (IR-8) எனும் நெல் இரகங்கத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். ஆரம்பகால நீர்ப்பாசன வசதிபெற்ற நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிரின் தானியமணிகள், சிவப்பு நிறத்தில் நீண்டு தடித்து காணப்படுகிறது. 85 - 95 சென்டிமீட்டர் (85-95 cm) அரைக் குள்ளப் பயிராகவும், ஒரு எக்டேருக்கு சுமார் 3000 கிலோ (30 Q/ha) மகசூல் தரவல்லதுமான இது, தென் இந்திய பகுதியான கேரள மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]

குறிப்பு

[தொகு]

பாரதி (பி டி பி - 41) (Bharthi (PTB-41) இந்தியாவின் கேரளம் மாநிலத்தின் நெல் வகையாகும்.[3]

சான்றுகள்

[தொகு]
  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Details of Rice Varieties: Page 1 - 44. Bharthi (PTB-41)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-04-17.
  3. Notified Rice Varieties in Kerala, India