உள்ளடக்கத்துக்குச் செல்

பர்கத் (கே - 78 - 13) (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பர்கத் (கே - 78 - 13) (Barkat (K-78-13) எனப்படும் இது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும்.[1] 135 - 145 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், சைன் - ஈஐ (Shine-ei ), மற்றும் ச - 971 (Ch-971) எனும் நெல் இரகங்கத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். குளிர்ச்சியான அதி உயர நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிரின் தானியமணிகள், குட்டையாக தடித்து காணப்படுகிறது. 90 - 95 சென்டிமீட்டர் (90-95 cm) அரைக் குள்ளப் பயிராகவும், ஒரு எக்டேருக்கு சுமார் 4700 கிலோ (47 Q/h) மகசூல் தரவல்லதுமான இது, வட இந்திய பகுதியான சம்மு காசுமீர் மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]

சான்றுகள்

[தொகு]
  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Details of Rice Varieties: Page 1 - Barkat (K-78-13)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-04-15.