உள்ளடக்கத்துக்குச் செல்

முருங்கைக் கார் (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முருங்கைக் கார்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
130 – 135 நாட்கள்[1]
மகசூல்
ஏக்கருக்கு சுமார் 1300 கிலோ[2]
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

முருங்கைக் கார் (Murungaikar) இவ்வாறாக அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் பிரதானமாக பயிரிடப்படும் இந்நெற்பயிர், ஒரு ஏக்கருக்கு குறைந்தது 600 கிலோ முதல் 900 கிலோ வரையிலும், முறையான பருவமழைக் காலத்தில் 1000 கிலோ முதல் 1300 கிலோ வரையிலும் தானிய மகசூல் கொடுப்பதாக கருதப்படுகிறது.[2]

பருவகாலம்

[தொகு]

மிகக் குறைவான மழைப்பொழிவுக் காலங்களுக்கு ஏற்ற இந்நெல் இரகத்தை, பொதுவாக ஆகத்து மாதம் தொடங்கும் பின் சம்பா பருவத்தில் (ஆவணியில்) விதைத்து, சனவரியில் (மார்கழியில்) அறுவடைச் செய்யபடுகிறது.[2] மேலும் இதேப் பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவதாக அறியப்படுகிறது.[3]

வளருகை

[தொகு]

மானாவாரி (புன்செய்) நிலங்களில் விதைக்கப்படும் இந்த நெல் வகை, விதைப்புக்கு முன்னதாக அவ்வயலில், அடியுரமாக ஆட்டுக் கிடை மடக்கியும், மேலுரமாக யூரியா எனும் இரசாயன உரத்தை பயன்படுத்தியும், மகசூலை ஈட்டுவதாக கூறப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. தமிழ்நாட்டில் பயிரிடும் பருவங்கள்
  2. 2.0 2.1 2.2 2.3 "Traditional Varieties grown in Tamil nadu - Murungaikar". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2014 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-02-05.
  3. பாரம்பரிய நெல் வகைப் பட்டங்கள் |கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]

புற இணைப்புகள்

[தொகு]