உள்ளடக்கத்துக்குச் செல்

கோ ஆர் எச் - 1 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோ ஆர் எச் - 1
CORH 1
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஐஆர்-62829-ஏ x ஐஆர்-10198-66-2-ஆர்
வகை
புதிய நெல் வகை
காலம்
110 - 115 நாட்கள்
மகசூல்
6000 கிலோ ஒரு எக்டேருக்கு
வெளியீடு
1994
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
மாநிலம்
தமிழ்நாடு
நாடு
 இந்தியா

கோ ஆர் எச் 1 (CORH 1) அல்லது எம். ஜி. ஆர் கோ ஆர் எச் 1 (M. G. R CORH 1) என அடையாளப் படுத்தப்பட்ட இது; வீரியம் மிகுந்த ஒட்டு நெல் வகையாகும். ஐ. ஆர். 62829 ஏ (IR62829 A) என்ற ஆண் மலட்டுத்தன்மை கொண்ட பெண் இரகத்தையும், ஐ. ஆர். 10198-66-2 (IR10198-66-2 R) என்ற ஆண் இரகத்தையும் இயற்கை முறையில் ஒட்ட சேர்த்து கிடைக்கப்பெறும் முதல் சந்ததி நெல் வகையான இது, ஒரு முறை பயிர் செய்த வீரிய ஒட்டு நெல்லிருந்து மறுபடியும் விதை எடுத்து விதைப்புக்குப் பயன்படுத்த முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.[1]

சாகுபடி

[தொகு]

ஒரு எக்டேருக்கு (Hectare) சுமார் 6000 கிலோ (6.08(T/Ha) வரை மகசூலாக கிடைக்கக்கூடிய கோ ஆர் எச் 1, 110 - 115 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் குறுகியகால நெல் வகையாகும்.[2] நடுத்தர சன்ன இரக தானிய அமைப்புடைய இதன் நெற்பயிர், நடுத்தர குட்டைப்பயிராகும்.[3]

சிறப்பு

[தொகு]

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் 1994 ஆம் ஆண்டு கண்டறிந்து வெளியிடப்பட்ட,[4] வெண்ணிற அரிசியை வழங்கும் இந்த நெற்பயிர், இலை உறை கருகல், பழுப்பு இலை புள்ளி நோய், புகையான் (fulgiorid), பச்சை தத்துப்பூச்சி, துங்ரோ நச்சுநிரல் (Tungro Virus) போன்றவைகளை எதிர்க்கும் திறன் கொண்டது.[3]

இவற்றையும் காண்க

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "CORH 1: the first rice hybrid for Tamil Nadu, India [1994]". agris.fao.org (ஆங்கிலம்) - FAO, 2016. பார்க்கப்பட்ட நாள் 2017-03-05.
  2. Table-8 : Hybrid Rice Variety
  3. 3.0 3.1 "CORH 1". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-03-06.
  4. Hybrid Rice - Rice hybrids released in India