ஆடுதுறை - 5 (நெல்)
ஆடுதுறை - 5 ADT 5 |
---|
வேளாண் பெயர் |
நெல்லூர் சம்பா |
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
நல் விதைத் தேர்வு முறை |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
180 - 185 நாட்கள் |
மகசூல் |
3100 கிலோ எக்டேர் |
வெளியீடு |
1925 |
வெளியீட்டு நிறுவனம் |
TRRI (TNAU), ஆடுதுறை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
ஏ டி டீ - 5 (ADT 5) பிரபலமாக நெல்லூர் சம்பா (Nellore samba) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
வெளியீடு
[தொகு]தமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI),[2] 1925 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]
காலம்
[தொகு]நீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 180 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற நெடுங்கால நெற்பயிர்கள், முன் சம்பா, சம்பா, பின்சம்பா, தாளடி/ பிசாணம், மற்றும் பின் பிசாணம். போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]
சாகுபடி
[தொகு]நீர்ப்பாசன வசதியுள்ள பகுதிகளிலும், மற்றும் தமிழகத்தின் திருச்சி, தென் ஆற்காடு, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மாவட்டங்களிலும், மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் பெரும்பான்மையாக சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]
சிறப்புப் பண்புகள்
[தொகு]- இந்த நெல் இரகம், ஒரு ஏக்கருக்கு 3100 கிலோவரை ( 3.1 t/ha) மகசூல் தரக்கூடியது.
- இதன் தானியமணிகள், தடித்து குட்டையாக உள்ளது.
- இந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.
- இவ்வகை நெற்பயிர், சம்பா மற்றும் தாளடி பருவத்திற்கு மிகவும் உகந்ததாக கூறப்படுகிறது.[1]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-31.
- ↑ 2.0 2.1 "Rice Knowledge Management Portal ADT 5". www.rkmp.co.in (ஆங்கிலம்) - 2011. பார்க்கப்பட்ட நாள் 2017-07-31.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Paddy Varieties of Tamil Nadu - Long duration varieties". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - TNAU 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-31.