உள்ளடக்கத்துக்குச் செல்

எச் எம் - 95 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எச் எம் - 95
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஜோனா 349 x டி என் 1
வகை
புதிய நெல் வகை
காலம்
105 நாட்கள்
மகசூல்
5600 கிலோ எக்டேர்
வெளியீடு
1975
மாநிலம்
பஞ்சாப்
நாடு
 இந்தியா

எச் எம் - 95 (HM-95) எனப்படும் இது; 1975 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும்.[1] 103 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், ஜோனா 349 (Jhona 349) எனும் நெல் இரகத்தையும், டி என் 1 (T(N)1) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். ஆரம்ப காலம், மற்றும் நடுத்தரக் காலத்தில் நீர்ப்பாசன வசதியுடனான நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிர், 73 நாட்களுக்கு பிறகும் 50 சதம் பூக்கள் பூக்கும் தன்மையை உடையது, மேலும், தடித்த தானியத்தை கொண்டுள்ள இவ்வகை நெற்பயிர், பஞ்சாப் பகுதி களில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]

சான்றுகள்

[தொகு]
  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Details of Rice Varieties: Page 1 - 30. HM-95". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-04-05.