நொறுங்கன் (நெல்)
நொறுங்கன் |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
105 – 110 நாட்கள் |
மகசூல் |
ஏக்கருக்கு சுமார் 2100 கிலோ |
தோற்றம் |
பண்டைய நெல் வகை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
நொறுங்கன் (Norungan) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டத்தித்தில், பிரதானாமாக விளையக்கூடிய இந்நெல் வகை, ஒரு ஏக்கருக்கு சுமார் 2100 கிலோ தானிய மகசூல் கிடைப்பதாக கூறப்படுகிறது.[1]
பருவகாலம்
[தொகு]குறுகியக்கால பயிரான 110 நாட்கள் வயதுடைய இந்நெல் இரகத்தை, ஒக்டோபர் மாதம் தொடங்கும் பின் பருவத்தில் (தமிழ் மதம் ஐப்பசியில்) விதைத்து, சனவரியில் (தமிழ் மதம் தையில்) அறுவடைச் செய்யபடுகிறது.[1] மேலும் இதேப் பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவதாக அறியப்படுகிறது.[2]
வளருகை
[தொகு]மணல் கலந்த மானாவரி (புன்செய்) நிலங்களில், மானாவாரிப் பயிராக விதைக்கப்பட்டு வளரக்கூடிய இந்த நெல் வகை, போதிய மழை நீர் இல்லாத போது இலைசுருட்டுப் புழு மற்றும் தண்டு துளைப்பான் போன்ற பூச்சிக்களால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.[1]
குறிப்புகள்
[தொகு]- பாரம்பரிய நெல் வகைகளில், நொறுங்கன் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியதாக கூறப்படுகிறது.[3]
- சொரசொரப்பான நெல் வகையான நொறுங்கனின் அரிசியில் இட்லி செய்ய ஏற்றதாக கருதப்படுகிறது.[4]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Traditional Varieties grown in Tamil nadu - Norungan". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2014 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-02-10.
- ↑ பாரம்பரிய நெல் வகைப் பட்டங்கள் |கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Varietal Information:- Page: 1[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "2. Norungan". Archived from the original on 2017-05-14. பார்க்கப்பட்ட நாள் 2017-02-12.