பெருங்கார் (நெல்)
பெருங்கார் |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
110 – 120 நாட்கள் |
மகசூல் |
ஏக்கருக்கு சுமார் 1400 கிலோ |
தோற்றம் |
பண்டைய நெல் வகை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
பெருங்கார் (Perunkar) என்னும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், திருவண்ணாமலை மாவட்டத்தின், வந்தவாசி வட்டராத்தில் உள்ள "தக்கண்டராபுரம்" எனும் நாட்டுப்புறப் பகுதியில் முதன்மையாக விளையக்கூடிய இந்நெல் வகை, ஒரு ஏக்கருக்கு சுமார் 1400 கிலோ நெல் தானியமும், சுமார் 1500 கிலோ வைக்கோலும், மகசூலாக கிடைப்பதாக கருதப்படுகிறது.[1]
பருவகாலம்
[தொகு]குறுகியகால நெல் வகையைச்சார்ந்த நெற்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலமான குறுவைப் பட்டம் எனும் இப்பருவத்தில், 120 நாள் நெற்பயிரான பெருங்கார் பயிரிடப்படுகிறது.[1] மேலும் சூன், மற்றும் யூலை மாதங்களில் தொடங்கக்கூடிய இக்குறுவைப் பட்டத்தில் தமிழகத்தின் கரூர், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களிலும், குறுவை சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாக கருதப்படுகிறது.[2]
வளருகை
[தொகு]நேரடி நெல் விதைப்பு, மற்றும் நாற்று நடுதல் என இரண்டு முறைகளையும் பின்பற்றி பயிரிடப்படும் இந்த நெற்பயிர், நேரடி விதைப்புக்கு 35 கிலோ நெல் விதையும், நாற்று நடவு முறைக்கு 40 நெல்விதையும் தேவைப்படுகிறது. 4.½ அடி உயரம் வரை வளரக் கூடிய இந்நெல் இரகம், தண்டு துளைப்பான் மற்றும் கதிர்நாவாய்ப்பூச்சி ஆகியவற்றை எதிர்த்து வளரும் ஆற்றலுடையது.[1]
குறிப்புகள்
[தொகு]- தொடர் நீர்த்தேக்கப் நிலப்பகுதியில் செழித்து வளரக்கூடிய இந்த நெற்பயிரின் அரிசியில், தென்னிந்திய உணவாக கருதப்படும் இட்லி, மற்றும் தோசைப் போன்ற சிற்றூண்டிகள் தயாரிக்க ஏற்றதாக கூறப்படுகிறது.[3]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Traditional Varieties grown in Tamil nadu - Perunkar". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2014 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-02-24.
- ↑ பாரம்பரிய நெல் இரகங்களின் பட்டங்கள்-கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "33. Perungar". Archived from the original on 2017-05-14. பார்க்கப்பட்ட நாள் 2017-02-24.