கலியன் சம்பா (நெல்)
கலியன் சம்பா |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
155 - 160 நாட்கள் |
தோற்றம் |
பண்டைய நெல் வகை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா[1] |
கலியன் சம்பா (Kaliyan Samba) பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த கலியன் சம்பா,[2] கரிசல் மண், வண்டல் மண், களிமண் எனப் பல மண் வகைகள் தமிழகத்தில் இருப்பினும், பரவலாகக் களிமண் நிலத்திலேயே நெல் வகைகள் சாகுபடி செய்யப்படுகிறது. களிமண்ணுக்கு ஏற்ற நெல் இரகமான கலியன் சம்பா, பசித்தவனுக்கு ஏற்ற இரகமென்று தமிழர்களால் கருதப்படுகிறது. (கலியன் என்றால் `பசித்தவன்’ என்ற ஒரு பொருள் உண்டு[3]).[4]
வளரியல்பு
[தொகு]ஐந்தடி வரை வளரக்கூடிய நெல் இரகமாகன கலியன் சம்பா, ‘வெள்ளமே போனாலும் பள்ளமே விளையும்’ என்ற பழமொழிக்கு ஏற்பப் பள்ளமான பகுதிகளுக்கு ஏற்றது. இயற்கையாகவே கலியன் சம்பாவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், பயிருடன் ஒரு வகையான களையும் அதிகமாக இருப்பதால் பூச்சித் தாக்குதலும் இருப்பதில்லை.[4]
ஒற்றை நடவு முறை
[தொகு]இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரும் இந்த இரகத்துக்குச், சாயும் தன்மை குறைவு. சிவப்பு நிற நெல்லும், சிகப்பு நிற அரிசியும் கொண்ட மோட்டா இரகமான கலியன் சம்பா, இட்லி, தோசை போன்ற சிற்றூண்டி உணவு வகைகளுக்கு ஏற்ற இரகமாகும். நாகப்பட்டினம் மாவட்டத்தின் வடக்குப் பகுதிகளில் இவ்வகை நெற்கள் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டுவந்துள்ளது. சாதாரண நடவு முறை, மற்றும் திருந்திய நெல் சாகுபடி (ஒற்றை நடவு முறை) முறைக்கு உகந்ததான இது, சாதாரண அளவில் ஏக்கருக்கு முப்பது கிலோவும், திருந்திய நெல் சாகுபடிக்குத் தரமான இரண்டுக் கிலோ விதையும் போதுமானது எனக் கருதப்படுகிறது.[4]
நோய் எதிர்ப்புத் திறன்
[தொகு]பண்டைய, மற்றும் பாரம்பரிய நெல் என்று சொன்னாலே மருத்துவக் குணம் நிறைந்ததாக இருந்துள்ளது. அந்த வகையில், கலியன் சம்பா அரிசியைக் கஞ்சிக் குடித்துவந்தால், நீண்ட காலமாக ஆறாத புண்கள் ஆறும் என்பது வேளாண் நம்பிக்கையாக உள்ளது. புற்றுநோய் வந்தவர்களுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய இந்த இரகத்துக்கு இயற்கை யாகவே நோய் எதிர்க்கக்கூடிய தன்மை அதிகமென்று கூறப்படுகிறது.[4]
இவற்றையும் காண்க
[தொகு]- நெல்
- பாரம்பரிய நெல்
- இலங்கையின் பாரம்பரிய அரிசி
- இயற்கை வேளாண்மை
- வேளாண்மை
- கலியன் கேட்ட வரங்கள் (தொடர்பற்றக் கட்டுரை)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kaliyan Samba
- ↑ பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல்
- ↑ கலியன் |அருஞ்சொற்பொருள்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 4.0 4.1 4.2 4.3 "நம் நெல் அறிவோம்: பசித்தவனுக்கு ஏற்ற கலியன் சம்பா". தி இந்து (தமிழ்) - யூலை 19, 2015. பார்க்கப்பட்ட நாள் 2017-01-03.