கே. எஸ். ஆர். தாஸ்
கே. எஸ். ஆர். தாஸ் | |
---|---|
பிறப்பு | நெல்லூர், ஆந்திர பிரதேசம், இந்தியா | 5 சனவரி 1936
இறப்பு | 8 சூன் 2012 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 76)
பணி | திரைப்பட இயக்குநர், திரைப்பட தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1966 - 2000 |
கே. எஸ். ஆர். தாஸ் (K. S. R. Das தெலுங்கு: కె. ఆర్. దాస్, 5 சனவரி 1936 – 8 சூன் 2012) பிரபல தெலுங்குத் திரைப்பட இயக்குநர். இவர் 1970 - 1980 வரையிலான காலகட்டத்தில் தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்டவர். ஜேம்ஸ்பாண்ட் பட பாணியில் சண்டைப் படங்களை எடுப்பதில் வல்லவர். 99 படங்களை இயக்கியவர். இவர் திரையரங்குகளில் சாதாரண நுழைவுச் சீட்டுத் தருபவராக இருந்து இயக்குனாராக உயர்ந்தவர். இயக்குநர் காந்தாராவுடன் பல ஆண்டுகாலம் பணியாற்றி சினிமாத் திறமையை வளர்த்துக் கொண்டவர். புராணப்படங்களின் பக்கமே கவனம் கொண்டிருந்த தெலுங்குத் திரையுலகை வர்த்தகரீதியாகக் கொண்டு வந்தவர். 1966இல் `லொகுட்டு பெருமுள்ளுகேர்னுகா` என்ற படத்தின் மூலம் திரையுலகில் உலகினுள் நுழைந்தவர்.
திரைப்பட உலகில்
[தொகு]1969இல் அப்போதைய தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா நடிக்க, இவர் இயக்கிய தக்கரி தொங்கா சக்கரி சுங்கா என்ற படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. வர்த்தகரீதியான, சண்டைப் படமான இது பெரும்பாலான இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நிறைந்த பணவசூலைக் கொடுத்தது. இவர் முன்னணி தெலுங்கு நடிகரான கிருஷ்ணாவை வைத்து முப்பது தெலுங்குப் படங்களை இயக்கியுள்ளார். மோகன்பாபு நடித்து இவர் இயக்கிய 'மோச தாலு' என்ற தெலுங்குப்படம் ஆங்கிலத்தில் மறு ஆக்கம் செய்யப் பட்டது.
இவர் இயக்கிய படங்களில் சில
[தொகு]- இப்தரு அசாத் ஜுலே (தெலுங்கு, ரஜினி நடித்தது)
- அன்னதம்முல சவால் (தெலுங்கு, ரஜினி நடித்தது)
- மோச தாலு (தெலுங்கு, மோகன்பாபு நடித்தது)
- தக்கரி தொங்கா சக்கரி சுங்கா