உள்ளடக்கத்துக்குச் செல்

எர்பெர்ட் இஸ்பென்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்பெர்ட் இசுபென்சர்
73 வயதில் இசுபென்சர்
காலம்19ஆம் நூற்றாண்டு மெய்யியல்
பகுதிமேற்கத்திய மெய்யியல்
பள்ளிபரிணாம வளர்ச்சி, நன்னம்பிக்கை, பண்டைய தாராளமயம்
முக்கிய ஆர்வங்கள்
பரிணாமம், நன்னம்பிக்கையியல், தலையிடாமைக் கொள்கை, பயனெறிமுறைக் கோட்பாடு
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
சமூக டார்வினிசம்
தக்கது தப்பிப்பிழைக்கும்
செல்வாக்குச் செலுத்தியோர்
கையொப்பம்

எர்பெர்ட் இஸ்பென்சர் (Herbert Spencer) (27 ஏப்ரல் 1820 – 8 டிசம்பர் 1903) ஒரு ஆங்கில மெய்யியலாளர், உயிரியல் அறிஞர், மானிடவியலாளர், சமூகவியலாளர், மற்றும் விக்டோரியா காலத்திய முன்னணி பண்டைய தாராளமய அரசியல் கருத்தியலாளரும் ஆவார்.

இயல் உலகின், உயிரிய உயிரினங்கள், மனித மனது, மனித கலாச்சாரம் மற்றும் சமூகங்கள் ஆகியவற்றின் முற்போக்கான வளர்ச்சியாக பரிணாம வளர்ச்சியைப் பற்றி விரிவான கருத்துருவை ஸ்பென்சர் உருவாக்கியிருந்தார். ஒரு பல்துறை அறிஞராக, நன்னெறி, மதம், மானுடவியல், பொருளாதாரம், அரசியல் கோட்பாடு, தத்துவம், இலக்கியம், வானியல், உயிரியல், சமூகவியல் மற்றும் உளவியலை உள்ளடக்கிய நெறிமுறைகள், போன்ற பலவகைத் துறைகளுக்கும் பங்களித்தவர். ஆங்கிலம் பேசும் கல்வியியல் அறிஞர்களின் மத்தியில், அவரது வாழ்நாளில் அவர் மிகப்பெரும் அதிகாரம் பொருந்திய நிலையை எட்டியிருந்தார். "இத்தகைய பரவலான புகழைப் பெற்ற மற்றும் ஒரு ஆங்கில தத்துவவாதி பெர்ட்ரேண்ட் ரஸ்ஸல் மட்டுமே, ஆனால் அவர் 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்"[1] இஸ்பென்சர் "பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி பத்தாண்டுகளில் மிகவும் பிரபலமான ஐரோப்பிய அறிவுசார் ஆற்றலாளர்" ஆவார்.[2][3]

தொடக்க கால வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

எர்பெர்ட் இஸ்பென்சர் ஏப்ரல் 27, 1820 இல் இங்கிலாந்தின் டெர்பியில் பிறந்தார். அவரது தந்தை வில்லியம் ஜார்ஜ் ஸ்பென்சர் ஒரு கிளர்ச்சியாளராக இருந்தார், எர்பெர்ட்டிடம் ஒரு சர்வாதிகார எதிர்ப்பு மனப்பான்மையை வித்திட்டார்.எர்பெர்ட்டின் தந்தை ஜார்ஜ், வழக்கத்திற்கு மாறான கற்பித்தல் முறைகளை பயன்படுத்தும் ஒரு பள்ளியின் நிறுவனர் ஆவார் மற்றும் சார்லஸ் டார்வினின் தாத்தாவின் எராஸ்மஸ் டார்வினின் சமகாலத்தியவராக இருந்தார். ஜார்ஜ், எர்பெர்ட்டின் தொடக்க கால கல்வியில் அறிவியலில் கவனத்தை செலுத்தினார். அதே நேரத்தில், டெர்பி தத்துவ சங்கத்தில் ஜார்ஜ் உறுப்பினராக இருந்ததன் மூலம் தத்துவ சிந்தனையையும் அறிமுகப்படுத்தினார். அவரது மாமா, தாமஸ் ஸ்பென்சர், எர்பெர்ட்டின் கல்வியில், கணிதம், இயற்பியல், இலத்தீன், சுதந்திர வர்த்தகம் மற்றும் சுதந்திரமான அரசியல் சிந்தனை ஆகிய துறைகளில் ஈடுபாட்டை வளர்த்ததன் மூலம் பங்களித்துள்ளார்.[4]

தொழில் மற்றும் பிற்கால வாழ்க்கை

[தொகு]

பிரிட்டனைச் சுற்றி தொடர்வண்டிப் பாதைகள் கட்டப்பட்டு வந்த காலத்தில், 1830 களில் இசஸ்பென்சர் கட்டிடவியல் பொறியியலாளராக இரயில்வேயில் பணியாற்றினார். அந்க கால கட்டத்தில் இஸ்பென்சர் உள்ளூர் பத்திரிகைகளில் எழுதுவதற்காக அதிக நேரத்தை செலவழித்தார். 1848 ஆம் ஆண்டில் இஸ்பென்சரின் தொழில் வாழ்க்கையானது, அறிவார்ந்த விடயங்களை நோக்கி வழி செலுத்தப்பட்டது. 1843 ஆண்டில் இங்கிலாந்தில் முதன் முதலாக வெளியிடப்பட்ட வாரப்பத்திரிக்கையும், தற்போது பரவலாக படிக்கப்படுவதுமான தி எகனாமிஸ்ட் பத்திரிகையின் ஆசிரியராக ஆனார்.[4][5] 1852 ஆம் ஆண்டில், இஸ்பென்சர் தனது புகழ்பெற்ற 'தி டெவலப்மென்டல் ஐப்போதெசிஸ்' என்ற கட்டுரையை 'லீடர்' என்ற பத்திரிக்கையில் வெளியிட்டார். அதில், அவர் உயிரிய பரிணாம வளர்ச்சி குறித்த தனது கருத்தை அவர் தெளிவுபடுத்தினார்.1853 ஆம் ஆண்டில், எர்பெர்ட் இஸ்பென்சர் தனது மாமாவின் சொத்துக்களை சட்டபூர்வமாக பெற்றார் பொருளாதாரரீதியாக சுய சார்புடையவரானார். ஆகையால், அவர் தனது அறிவுசார் முயற்சிகளுக்கு அதிக நேரத்தை செலவிடுவதற்காகத் தனது வேலையை விட்டு விலகினார். 1854 ஆம் ஆண்டு முதல் 1859 வரை அவர் புத்தகங்களில் தொடர் கட்டுரைகளை வெளியிட்டார். அவை பின்னர் புத்தக வடிவில் தொகுக்கப்பட்டன.[6]

குறிப்புகள்

[தொகு]
  1. Richards, Peter (4 November 2010) Herbert Spencer: Social Darwinist or Libertarian Prophet?, Mises Institute
  2. Thomas Eriksen and FinnNielsen, A history of anthropology (2001) p. 37
  3. "Spencer became the most famous philosopher of his time," says Henry L. Tischler, Introduction to Sociology (2010) p. 12
  4. 4.0 4.1 https://www.thoughtco.com/herbert-spencer-3026492
  5. https://www.iep.utm.edu/spencer/
  6. https://www.thefamouspeople.com/profiles/herbert-spencer-171.php