என்றி ஆப்சன் ரிச்சார்ட்சன்
என்றி ஆப்சன் ரிச்சார்ட்சன் | |
---|---|
என்றி ஆப்சன் ரிச்சார்ட்சனின் ஓவியம்-தேசிய ஓவியக் கண்காட்சி (வாஷிங்டன் டிசி) | |
தனிப்பட்ட விவரங்கள் | |
நாட்டினம் | அமெரிக்கர் |
பிறப்பு | பிரீஸ்ட்லி பிளான்ட்டேஷன், செயின்ட் ஜேம்ஸ் பாரிஷ், லூசியானா, ஐக்கிய அமெரிக்கா | செப்டம்பர் 29, 1838
இறப்பு | ஏப்ரல் 27, 1886 புரூக்ளின், ஐக்கிய அமெரிக்கா | (அகவை 47)
பாடசாலை | ஹார்வர்டு கல்லூரி, டுலேன் பல்கலைக்கழகம் இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் |
பணி | |
கட்டிடங்கள் | டிரினிட்டி தேவாலயம், பாஸ்டன் |
வடிவமைப்பு | Richardsonian Romanesque |
என்றி ஆப்சன் ரிச்சார்ட்சன் (Henry Hobson Richardson, செப்டெம்பர் 29, 1838 – ஏப்ரல் 27, 1886) என்பார், ஒரு முன்னணி அமெரிக்கக் கட்டிடக்கலைஞர். இவர், அல்பனி, பொசுட்டன், பஃபலோ, சிக்காகோ, பிட்சுபர்க், மில்வாக்கி போன்ற பல அமெரிக்க நகரங்களில் கட்டிடங்களை வடிவமைத்துள்ளார். இவர் பிரபலப்படுத்திய கட்டிடக்கலைப் பாணி ரிச்சார்ட்சோனிய ரோமானெஸ்க் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. லூயிசு சலிவன், பிராங்க் லாயிட் ரைட் ஆகியோருடன் சேர்த்து ரிச்சார்ட்சனும் அமெரிக்கக் கட்டிடக்கலையின் மும்மூர்த்திகளுள் ஒருவராகக் கணிக்கப்படுகிறார்.[1]
வரலாறு
[தொகு]ரிச்சார்ட்சன், லூசியானாவின் சென் சேம்சு கோவிற்பற்றில் உள்ள பிறீஸ்ட்லி பெருந்தோட்டத்தில் பிறந்தார்.[2] இவரது இளமைக் காலத்தின் ஒரு பகுதி நியூ ஆர்லியன்சில் கழிந்தது. அங்கே இவரது குடும்பத்தினர் அலெக்சான்டர் டி வூட் என்னும் கட்டிடக்கலைஞர் வடிவமைத்த செங்கல் வீட்டில் வசித்தனர்.[3] ரிச்சார்ட்சன், கண்டுபிடிப்பாளரும், மெய்யியலாளரும், ஒட்சிசனைக் கண்டுபிடித்தவருமான சோசேப் பிறீசுட்லியின் கொள்ளுப் பேரன் ஆவார்.[4]
இவர், ஆவார்ட் கல்லூரியிலும், துலேன் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். முதலில் குடிசார் பொறியியலில் நாட்டம் கொண்டிருந்த ரிச்சார்ட்சன், பின்னர் கட்டிடக்கலையில் விருப்பம் கொண்டார். இதனால், பாரிசுக்குச் சென்று புகழ்பெற்ற இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். இந்நிறுவனத்தில், கட்டிடக்கலை பயின்ற இரண்டாவது அமெரிக்கர் இவராவார். தொடர்ந்து வந்த பத்தாண்டுகளில் அமெரிக்கர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் இந்நிறுவனம் பெரும் பங்கு வகித்தது. அமெரிக்க உள்நாட்டுப் போர் காரணமாகக் குடும்பத்தினரின் உதவி கிடைக்காமல் போனதால், அந்நிறுவனத்தில் பயிற்சியை முழுமையாக முடிக்க இவரால் முடியவில்லை. 1865ல் ரிச்சார்ட்சன் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பினார்.
குறிப்புக்கள்
[தொகு]- ↑ O'Gorman, James F., Three American Architects: Richardson, Sullivan, and Wright, 1865-1915, University of Chicago Press, Chicago, 1991.
- ↑ Rail, Tony: "William Priestley Vindicated, with a Previously Unpublished Letter", Enlightenment and Dissent, no. 28 (2012), 150–195.
- ↑ Mary Louise Christovich, et al. [ed.], New Orleans Architecture, v. 2: The American Sector (Gretna, LA), p. 174.
- ↑ Van Rensselaer, Mariana Griswold., Henry Hobson Richardson and His Works, Dover Publications Inc, New York, 1959, p 1.