உலகப் பெருங்கடல்கள் நாள்
உலகப் பெருங்கடல்கள் நாள் World Oceans Day | |
---|---|
கடைபிடிப்போர் | அனைத்து ஐநா உறுப்பு நாடுகள் |
நாள் | 8 சூன் |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
உலகப் பெருங்கடல்கள் நாள் (World Oceans Day) எனும் இந்நாளை ஆண்டுதோறும் உலக நாடுகள் முழுவதும் சூன் 8 ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வை, 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின், இரியோ டி செனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில், முதன் முறையாக கனடா இந்நிகழ்வுக்கான கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து, இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது.[1] பின்னாளில், ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது.[2] அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
வாழ்வாதாரத்தில் கடலின் பங்கு
[தொகு]பூமியில் நாம் வாழ்வதற்கு கடல் பெரும்பங்கு வகிக்கிறது, மேலும் கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து கடல் மார்க்கமாகவே கையாளப்படுகிறது. கடல் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்வதோடு, ஆக்சிசன் எனும் உயிரிவாயுவை உற்பத்தி செய்தும், முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்களையும் வழங்குகிறது. மேலும், காலநிலை மாற்றங்களைச் சீரமைக்க பேருதவியாக உள்ள இப்பெருங்கடல்கள், சில சமூகத்தினரின் வாழ்வாதாரங்களாக அமைந்துள்ளது.[3]
நோக்கம்
[தொகு]உலகின் கடல்களை பாதுகாப்பதற்காகவும், மற்றும் கெளரவிக்கிற வகையிலும், 'உலக பெருங்கடல்கள் நாள்' ஆண்டுதோறும் அவதானிக்கப்படுகிறது. கடல் ஆக்சிசன், காலநிலை கட்டுப்பாடு, உணவு மூலாதாரங்கள், மருத்துவம், மற்றும் இன்னும் பல வளங்கள் மற்றும் சேவைகள் நமக்கு வழங்குகிறது. உலக பெருங்கடல்கள் நாள், பெருங்கடல் மற்றும் அதன் ஆதாரங்களைப் பாதுகாக்க தனிப்பட்ட, மற்றும் சமூக ஒருங்கிணைப்புடன் நடவடிக்கை எடுக்க ஒரு தனிப்பட்ட வாய்ப்பை ஏற்படுத்துகிறது.[4]
நெகிழியால் சீரழியும் ஆழி
[தொகு]நெகிழி அல்லது பிளாஸ்டிக் (Plastic) எனும், நெடுங்காலம் அழியாத்தன்மை உடைய நெகிழியின் குப்பை கடல்களைச் சீரழிக்கிறது. மேலும், பிளாஸ்டிக் குப்பையைக் கடலில் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த ஆண்டின் (2015) மையப்பொருளாக உள்ளது. நேரடியாகக் கடலில் பிளாஸ்டிக் குப்பை போடப்படுவது மட்டுமில்லாமல், கழிவு நீர் பாதைகள் மூலமாகவும், பெருமளவு நெகிழியின் கழிவு கடலில் கலக்கிறது. இதுபோன்ற கழிவுகள் கடலில் சேரும்போது அது கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து சிறிய துணுக்குகளாகிவிடுகிறது. நுண் உயிரினங்களும், சிதையாத நெகிழி பைகளை ஆமை போன்ற உயிரினங்களும் உண்டு இறந்துவிடுவது மட்டுமல்லாமல் கடல் உணவு வழியாக மனித உடல்களுக்குள் நெகிழி புகுந்துவிடுகிறது.[5]
உலகப் பெருங்கடல்கள் நாள் 2020
[தொகு]உலகப் பெருங்கடல்கள் நாள் 2020 கருத்துருவாக "ஒரு நிலையான பெருங்கடல் புதுமைப்புனையும் உறுதியளிப்பு"
இந்த ஆண்டின் கருப்பொருளானது, கடலுக்கு சவால்கள் தொடர்ந்து வளர்ந்து வருவதால், புதுமையான தீர்வுகளின் தேவையும் அவற்றை ஒழிக்கும் மக்களும் தேவைப்படுகிறார்கள். அதற்காக, ஐ. நா. உலக பெருங்கடல் நாள் 2020 இன் கருப்பொருனது ஒரு நிலையான பெருங்கடலை உருவாக்கவும், புதுமை - புதிய முறைகள், யோசனைகள் அல்லது அதற்கான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது தொடர்பானது என கூறப்படுகிறது. 2021 முதல் 2030 வரை இயங்கும் நிலையில் அபிவிருத்தி, மற்றும் பெருங்கடல் விஞ்ஞானத்திற்கான முன்னணியில் இந்த ஆண்டின் கருப்பொருள் மிகவும் பொருத்தமானது என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.[6]
உலகப் பெருங்கடல்கள் நாள் 2019
[தொகு]உலகப் பெருங்கடல்கள் நாள் 2019 இன் கருப்பொருள், "பாலினம் மற்றும் பெருங்கடல்கள்"
இந்த ஆண்டின் கருப்பொருளான "பாலினம் & பெருங்கடல்கள்" என்பது, உலகெங்கிலும் உள்ள பெருங்கடல் பற்றிய கதைசொல்லிகள் மற்றும் பேச்சாளர்கள் பாலின கல்வியறிவை உருவாக்குவதற்கான முன்னோக்குகளைப் பகிர்ந்து கொள்வதோடு கடல் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி, மீன்வளம், கடலில் உழைப்பு, கடலில் இடம்பெயர்வு மற்றும் மனித போக்குவரத்து போன்ற கடல் தொடர்பான நடவடிக்கைகளில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கு சாத்தியமான வழிகளைக் கண்டுபிடிப்பார்கள். இதற்காக உலகப் பெருங்கடல் நாளை கொண்டாடும் வகையில் ஐ.நா ஒரு மாநாட்டை நடத்தியது.[7]
உலகப் பெருங்கடல்கள் நாள் 2018
[தொகு]உலகப் பெருங்கடல்கள் நாள் 2018 இன் கருப்பொருளானது, "எங்கள் பெருங்கடலை சுத்தம் செய்யுங்கள்"
உலகப் பெருங்கடல் நாள் 2018 “எங்கள் பெருங்கடலை சுத்தப்படுத்துங்கள்” என்ற கருப்பொருளைக் கொண்டுள்ளது, இது நியூயார்க்கிலும், மற்றும் உலகெங்கிலும் 40 நிகழ்வுகளிலும் கொண்டாடப்படும் என ஐ.நா.வால் அறிவித்தது.[8]
உலகப் பெருங்கடல்கள் நாள் 2017
[தொகு]உலகப் பெருங்கடல்கள் நாள் 2017 கருப்பொருள்: "நமது பெருங்கடல்கள், நமது எதிர்காலம்"
பெருங்கடல் திட்டமானது, உலகப் பெருங்கடல் நாளை, நமது கடலையும் அதன் வாழ்க்கையையும் கொண்டாடுவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பாக ஊக்குவித்து ஒருங்கிணைக்கிறது, மேலும் மக்களை நேர்மறையான மற்றும் அதிகாரம் செலுத்தும் வழிகளில் ஈடுபடுத்துகிறது. இந்த ஆண்டின் உலகப் பெருங்கடல் நாளுக்கான கருப்பொருள், "நமது பெருங்கடல்கள், நமது எதிர்காலம்" என்பது. நெகிழிகளின் மாசுபாட்டிற்கான தீர்வுகளை ஊக்குவிப்பதிலும், ஆரோக்கியமான கடல் மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான கடல் குப்பைகளைத் தடுப்பதிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்துவதும் ஆகும்.[9]
உலகப் பெருங்கடல்கள் நாள் 2016
[தொகு]உலக பெருங்கடல்கள் நாள் 2016-இன் கருத்துருவாக "ஆரோக்கியமான கடல்கள், ஆரோக்கியமான கிரகம்" (“Healthy Oceans, Healthy Planet”) என்பதாகும். இந்நாளை 90-க்கும் அதிகமான நாடுகளில், நூற்றுக்கணக்கான இடங்களில் கொண்டாடப்படுகிறது. பல இலட்சக்கணக்கான மக்களை, ஆன்சைட் மற்றும் ஆன்லைன் மூலம் உலகப் பெருங்கடல்கள் நாளுடன் தொடர்புகள் ஏற்படுத்தியுள்ளது. குறுஞ்செய்திச்சேவை இணையமான 65 மில்லியன் மக்களை எட்டியுள்ள துவிட்டரில், இன்சுட்டாகிராம் எனும் மென்பொருள் உதவியுடன், 'உலக பெருங்கடல்கள் நாள்' குறுஞ்செய்திகள், இடுகைகள் என 290 மில்லியன் மக்களை சென்றடைந்துள்ளது.[10]
உலகப் பெருங்கடல்கள் நாள் 2015
[தொகு]உலகப் பெருங்கடல்கள் நாளை "ஆரோக்கியமான பெருங்கடல்கள், ஆரோக்கியமான கிரகம்" ("Healthy oceans, healthy planet") எனும் கருப்பொருள் கொண்டு, இரண்டாண்டுகள் கொண்டாடம் நோக்குடன், இவ்வுலகம் முதல் ஆண்டாக கொண்டாடியது. நீர்வாழ் பிராணிகள் தாவரங்கள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், இளைஞர் மன்றங்கள், பள்ளிகள், மற்றும் வணிகங்கள் போன்ற இடங்களில் கிட்டத்தட்ட 1000 நிகழ்வுகள் நடைபெற்றது. மேலும், எண்ணற்ற தனிநபர்கள் எங்கள் கடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற குறிக்கோளுடன் உலகப் பெருங்கடல்கள் நாளில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.[11]
உலகப் பெருங்கடல்கள் நாள் 2014
[தொகு]2014இன் உலக பெருங்கடல்கள் நாளின் கருப்பொருள் ""நாம் யாவர்க்கும் கடல்களை பாதுகாக்கும் ஆற்றல் உண்டு" ( "Together we have the power to protect the ocean") எனும் நோக்கத்தில் 2013 முதல் 2014 வரை வலையமைப்புச் சேவையான துவிட்டரில், 700க்கும் மேற்பட்ட குறுஞ்செய்தி பதிவுகள் இடம் பிடித்தது. மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேடிக்கைகள், மற்றும் சாதகமான வழிகளில் சொந்த, மற்றும் சமூக ஒற்றுமையுடன் மிகவும் விழிப்புணர்வுடன் ஈடுபட்டனர்.[12]
உலகப் பெருங்கடல்கள் நாள் 2013
[தொகு]2013இன், உலக பெருங்கடல்கள் நாளின், ""நாம் யாவர்க்கும் கடல்களை பாதுகாக்கும் ஆற்றல் உண்டு" ( "Together we have the power to protect the ocean") என்ற கருப்பொருள் கொண்டு 2013, மற்றும் 2014 வரை நிகழ்வுகளில் 600 க்கும் அதிகமான சேவையாளர்கள் பங்காற்றினர்.
உலகப் பெருங்கடல்கள் நாள் 2012
[தொகு]உலகப் பெருங்கடல்கள் நாள் 2012இன் கருப்பொருள், "இளைஞர்:அடுத்த அலை மாற்றம்" (Youth: the Next Wave for Change) என்பதாகும். 2012இல் உலக பெருங்கடல்கள் நாளை 55 நாடுகளில் நடந்தது 500 நிகழ்வுகள், பெருங்கடல் திட்டம் சீரமைக்கப்பட்டத் தளமாக தொடங்கப்பட்டது.[13]
உலகப் பெருங்கடல்கள் நாள் 2011
[தொகு]2011ஆம் ஆண்டின் உலகப் பெருங்கடல்கள் நாளின் கருப்பொருள் 2012 போன்றதே, இருப்பினும் கொண்டாட்டங்கள், நிகழ்வுகள் உலகம் முழுவதும் அதிகரித்திருந்தது. ஐ.நா. செய்தியாளர் கூட்டத்திலும், மற்றும் நியூயார்க்கில் உள்ள அதன் தலைமையகத்தில் ஒரு குழுவும், உலகப் பெருங்கடல்கள் நாள் குறித்து விவாதித்தது.[14]
உலகப் பெருங்கடல்கள் நாள் 2010
[தொகு]உலகப் பெருங்கடல்கள் நாள் (2010, சூன் 8) - கருப்பொருள், "எங்கள் சமுத்திரங்கள்: வாய்ப்புகளும் சவால்களும்" (“Our oceans: opportunities and challenges”).[14]
உலகப் பெருங்கடல்கள் நாள் 2009
[தொகு]2009இன் உலகப் பெருங்கடல்கள் நாள் கருப்பொருள், "எங்கள் கடல்கள், நமது கடமை" (“Our Oceans, Our Responsibility”).[14]
கருப்பொருள்கள்
[தொகு]ஐக்கிய நாடுகள் சபை பின்வரும் வருடாந்திர கருப்பொருள்களைத் தேர்ந்தெடுத்தது:
- 2009: "எங்கள் பெருங்கடல்கள், எங்கள் பொறுப்புகள்."[15]
- 2010: "வாய்ப்புகள் மற்றும் சவால்கள்."[16]
- 2011: "நமது பெருங்கடல்கள்: எங்கள் எதிர்காலத்தை பசுமைப்படுத்துதல்."[17]
- 2012: "யூ என் சி எல் ஓ எஸ் @ 30"[18]
- 2013: "பெருங்கடல்கள் மற்றும் மக்கள்."[19]
- 2014: "பெருங்கடல் நிலைத்தன்மை: சமுத்திரங்கள் எதிர்காலத்தில் நம்மைத் தக்கவைத்துக்கொள்வதை உறுதி செய்வோம்."[20]
- 2015: "ஆரோக்கியமான பெருங்கடல்கள், ஆரோக்கியமான கிரகம்."[21]
- 2016: "ஆரோக்கியமான பெருங்கடல்கள், ஆரோக்கியமான கிரகம்."[22]
- 2017: "நமது பெருங்கடல்கள், நமது எதிர்காலம்."[23]
- 2018: "எங்கள் பெருங்கடலை சுத்தம் செய்யுங்கள்!"[24]
- 2019: "ஒன்றாக நாம் நமது பெருங்கடலைப் பாதுகாத்து மீட்டெடுக்க முடியும்"[25]
- 2020: "ஒரு நிலையான பெருங்கடல் புதுமைப்புனையும் உறுதியளிப்பு"[26]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ About World Oceans Day பரணிடப்பட்டது 2011-03-14 at the வந்தவழி இயந்திரம். The Ocean Project
- ↑ Resolution adopted by the General Assembly, 63/111. Oceans and the law of the sea, paragraph 171: "Resolves that, as from 2009, the United Nations will designate 8 June as World Oceans Day". 5 December 2008
- ↑ "உலகப் பெருங்கடல்கள் நாள் (தமிழ்)". ibctamil.com. Archived from the original on 25 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "World Ocean Day- "Healthy Oceans, Healthy Planet"". blog.ithinksolutionsonline.com. Archived from the original on 2 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Cite has empty unknown parameter:|4=
(help) - ↑ "Healthy oceans, healthy planet (ஆங்கிலம்)". usatoday.com.
- ↑ "World Oceans Day 2020 (ஆங்கிலம்)". WWW.UNESCO.ORG.
- ↑ "2019 UN World Oceans Day Conference (ஆங்கிலம்)". United Nations. Archived from the original on 2020-10-30.
- ↑ "World Oceans Day 2018 to focus on cleaning up plastic in oceans (ஆங்கிலம்)". www.un.org.
- ↑ "Get Ready for World Oceans Day 2017! (ஆங்கிலம்)". www.theoceanproject.org-Sam Mackiewicz.
- ↑ "THANK YOU FOR CELEBRATING WORLD OCEANS DAY 2016! (ஆங்கிலம்)". www.worldoceansday.org.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "ANNUAL THEME (ஆங்கிலம்)". www.worldoceansday.org. Archived from the original on 2016-11-17.
- ↑ "World Oceans Day 2014: Together, We Have the Power to Protect the Ocean (ஆங்கிலம்)". voices.nationalgeographic.com.
- ↑ "World Oceans Day (ஆங்கிலம்)". www.beachapedia.org.
- ↑ 14.0 14.1 14.2 "WORLD OCEANS DAY 2011 (ஆங்கிலம்)". www.un.org. 2013.
- ↑ WORLD OCEANS DAY 2009 |06 11 2020
- ↑ WORLD OCEANS DAY 2010 |06 11 2020
- ↑ WORLD OCEANS DAY 2011 |06 11 2020
- ↑ WORLD OCEANS DAY 2012 |06 11 2020
- ↑ WORLD OCEANS DAY 2013 |06 11 2020
- ↑ WORLD OCEANS DAY 2014 |06 11 2020
- ↑ WORLD OCEANS DAY 2015 |06 11 2020
- ↑ WORLD OCEANS DAY 2016 |06 11 2020
- ↑ WORLD OCEANS DAY 2017 |06 11 2020
- ↑ WORLD OCEANS DAY 2018 |06 11 2020
- ↑ WORLD OCEANS DAY 2019 |06 11 2020[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "WORLD OCEANS DAY 2020 |06 11 2020". Archived from the original on 2020-10-24. பார்க்கப்பட்ட நாள் 2020-11-06.