உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்காக்களில் பிரான்சியக் குடியேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட அமெரிக்காவின் நிலப்படம் (1750) - பிரான்சு (நீலம்), பிரித்தானியா (இளஞ்சிவப்பு), எசுப்பானியா (செம்மஞ்சள்)

அமெரிக்காக்களில் பிரான்சிய குடியேற்றம் (French colonization of the Americas) 16ஆம் நூற்றாண்டில் துவங்கியது. இது அடுத்த நூற்றாண்டுகளில் தொடர்ந்து பிரான்சு மேற்கு அரைக்கோளத்தில் தனது குடியேற்றப் பேரரசை நிறுவியது. வட அமெரிக்காவின் பெரும்பாலான கிழக்குப் பகுதிகளிலும் பல கரிபியன் தீவுகளிலும் தென் அமெரிக்காவிலும் தனது குடியேற்றங்களை பிரான்சு நிறுவியிருந்தது. இவற்றிலிருந்து மீன், சர்க்கரை, விலங்கு மென்மயிர்கள் ஏற்றுமதி செய்தது.

இப்புதிய உலகின் தங்கள் குடியேற்றங்களில் கோட்டைகளையும் குடியிருப்புகளையும் கட்டினர்;இவ்வாறு உருவான நகரங்கள் கனடாவில் கியூபெக், மொண்ட்ரியால் நகரங்கள்; ஐக்கிய அமெரிக்காவில் டிட்ராயிட், கிரீன் பே, விசுகான்சின், செயின்ட் லூயிஸ், கேப் கிரார்டோ, அலபாமாவின் மொபைல், மிசிசிப்பியின் பிலோக்சி, பாடன் ரூஜ் மற்றும் நியூ ஓர்லென்ஸ்; பிரேசிலில் போர்ட்-ஓ-பிரின்ஸ், எயிட்டியில் காப்-எயித்தியன், பிரெஞ்சு கயானாவில் கயேன் மற்றும் சாவோ லூயிசு ஆகும்.

வட அமெரிக்கா

[தொகு]

பின்னணி

[தொகு]

பிரான்சியர்கள் அமெரிக்காக்களுக்கு முதலில் நாடுகாண் பயணிகளாகவே வந்தனர்; அமைதிப் பெருங்கடலுக்கான வழியைக் கண்டறிந்து பெருஞ்செல்வம் ஈட்ட விரும்பினர். பிரான்சின் முதலாம் பிரான்சிசுக் காலத்தில் பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. 1524இல் இத்தாலியில் பிறந்த கியோவான்னி டா வெர்ரசானோவை புளோரிடாவிற்கும் நியூபவுண்ட்லாந்திற்கும் இடைப்பட்ட பகுதி வழியாக அமைதிப் பெருங்கடலுக்கு வழி தேடினார். வெர்ரசானோ புதிய எசுப்பானியாவிற்கும் ஆங்கிலேயர்களின் நியூபவுண்ட்லாந்திற்கும் இடைபட்ட பகுதியை பிரான்செஸ்கா என்றும் நோவா காலியா என்றும் பெயரிட்டு பிரான்சிய உரிமையை நிலைநாட்டினார்.[1]

குடியேற்றம்

[தொகு]
இழ்சாக் கார்ட்டியேயின் ஓவியம் - தியோபில் ஹாமெல், 1844

1534இல் முதலாம் பிரான்சிசு நியூபவுண்ட்லாந்து, செயின்ட் லாரன்சு ஆற்றுத் தீரத்திலும் தேடலை மேற்கொள்ள இழ்சாக் கார்ட்டியேவை அனுப்பினார். இவர் காசுபெ மூவலந்தீவின் கரையில் சிலுவையை நாட்டி புதிய பிரான்சை நிறுவினார். இதனைத் தொடர்ந்து பிரான்சு வட அமெரிக்காவில் பல குடியேற்றங்களை நிறுவ முயன்றது; ஆனால் இம்முயற்சியில் வானிலை, நோய்கள், அல்லது பிற ஐரோப்பிய நாடுகளுடனான சண்டைகளால் பெரும் வெற்றி அடைய முடியவில்லை. 1541இல் கார்ட்டியே 400 குடியேறிகளுடன் கியூபெக்கின் காப்-ரூஜ்ஜில் முதல் குடியேற்றத்தை நிறுவ முயன்றார். ஆனால் மோசமான வானிலையாலும் முதல் நாடுகளின் தாக்குதலாலும் அடுத்த ஆண்டிலேயே தோல்வியுற்றது. 1564இல் தற்போதைய ஜாக்சன்வில், புளோரிடாவில் கரோலைன் கோட்டையை நிறுவினர். இதுவும் ஓராண்டுக்குள்ளேயே எசுப்பானியர்கள் கைப்பற்றினர். 1598இல் நோவா இசுகாட்டியாவில் சாபிள் தீவில் குற்றவாளிகளை குடியமர்த்தும் முயற்சியும் தோல்வியடைந்தது. கியூபெக்கிலும் அகாடியாவிலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கடுமையான பனிக்காலம், நோய்களால் தோல்வியடைந்தது. 1608இல் சாமுவல் டெ சாம்பிளைய்ன் கியூபெக்கை நிறுவியதுடன் அமெரிக்கப் பேரேரிகளை ஆய்வு நடத்த துவங்கினார். 1634இல் ழான் நிகோல் தற்போதைய கிரீன் பேயை நிறுவினார். இது அமெரிக்காவில் மிகப்பழமையான ஐரோப்பியக் குடியேற்றங்களில் ஒன்றாகும். 1632இல் பவுல் டெ சோமெடி வில்-மாரியை (தற்போதைய மொண்ட்ரியால்) நிறுவினார். 17ஆவது நூற்றாண்டு இறுதியில் மெக்சிகோ வளைகுடா முதல் பேரேறிகள் வரை செயின்ட் லாரன்சு ஆற்றினூடே பல கோட்டைகள் மூலமாக பிணைப்பை ஏற்படுத்தினர். 1685இல் டெக்சாசில் செயின்ட் லூயி கோட்டையை நிறுவினர்; ஆனால் 1688இலேயே இதனை இழந்தனர். 1701இல் அன்டாய்ன் டெ லா மோத் காடிலாக் டிட்ராய்ட் கோட்டையை (தற்கால டிட்ராயிட்) நிறுவினார்;1718இல் நியூ ஓர்லென்ஸ் நிறுவப்பட்டது. 1719இல் பாடன் ரூஜ் நிறுவப்பட்டது.

இந்தியத் தோழர்களுடன் ஆளுநர் பிரான்டெனாக் பழங்குடி நடனம் ஆடுதல்

மேற்சான்றுகள்

[தொகு]