உள்ளடக்கத்துக்குச் செல்

மார்கஸ் ஜுனியஸ் புருட்டஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்கஸ் ஜுனியஸ் புருட்டஸ்
மார்கஸ் ஜுனியஸ் புருட்டசின் தலையுடன் கூடிய வெள்ளி நாணயம்
புருட்டசின் மரணத்திற்கு பிறகு வெளியிட்டப்பட்ட வெள்ளி நாணயம்
பிறப்புகிமு 85
இறப்புகிமு 42
பிலிப்பு அருகில், மாசிடோனியா (உரோமை மாகாணம்)
இறப்பிற்கான
காரணம்
தற்கொலை
தேசியம்உரோமானியர்
பணிஅரசியல்வாதி, பேச்சாளர் மற்றும் படைத்தளபதி
அறியப்படுவதுஜூலியஸ் சீசரை கொலை செய்தமைக்கு
பெற்றோர்எம். புருட்டஸ் மற்றும் செர்வில்லா
வாழ்க்கைத்
துணை
  • (1)கிலெளடியா
  • (2) போர்சியா

மார்கஸ் ஜுனியஸ் புருட்டஸ் (Marcus Junius Brutus), (பிறப்பு:கிமு 85 - இறப்பு:கிமு 42) பொதுவாக புருட்டஸ் என்று குறிப்பிடப்படுபவர். ரோமானிய குடியரசின் மறைந்த அரசியல்வாதி, பேச்சாளர் மற்றும் படைத்தலைவர் ஆவார்.இவர் ஜூலியஸ் சீசரை கொலை செய்தமைக்கு சேக்ஸ்பியரின் இலக்கியங்களில் நன்கு அறியப்படுபவர்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

லெபிடசின் கிளர்ச்சியில் பங்கேற்ற புருட்டசின் தந்தையை உரோமைக் குடியரசின் படைத்தலைவர் பாம்பேவால் கொல்லப்பட்டார். புருட்டசின் தாயார் கேட்டோ தி யங்கரின் ஒன்றுவிட்ட சகோதரி, ஜூலியஸ் சீசரின் மனைவியானார். கிமு 59ல் புருட்டசின் மாமா புருட்டசை தத்தெடுத்தார். புருட்டஸ் தனது மாமா சைப்ரசின் ஆளுநராக இருந்தபோது, அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது. இந்த நேரத்தில், புருடஸ் அதிக வட்டி விகிதத்தில் கடன் கொடுத்து தன்னை வளப்படுத்திக் கொண்டார். அவர் ஒரு பணக்காரராக ரோம் திரும்பினார். அங்கு அவர் கிளாடியா புல்ச்ராவை மணந்தார். செனட்டில் அவரது முதல் தோற்றத்திலிருந்து, புருடஸ் ஆப்டிமேட்களுடன் இணைந்தார். இது மார்கஸ் லிசினியஸ் க்ராஸஸ், க்னேயஸ் பாம்பீயஸ் மேக்னஸ் மற்றும் கயஸ் ஜூலியஸ் சீசர் ஆகியோரின் முதல் மூவராட்சி எதிரான பழமைவாதப் பிரிவு ஆகும்.

செனட் வாழ்க்கை

[தொகு]

கிமு 49ல் பாம்பே மற்றும் ஜுலியஸ் சீசர் இடையே உள்நாட்டுப் போர் வெடித்தபோது, புருட்டஸ் தனது பழைய எதிரியும் ஆப்டிமேட்ஸின் தற்போதைய தலைவருமான பாம்பேயைப் பின்பற்றினார். பார்சலஸ் போரின் பேரழிவிற்குப் பிறகு, புருடஸ், சீசருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார். சீசர் உடனடியாக அவரை மன்னித்தார். சீசர் பின்னர் அவரை தனது உள் வட்டத்தில் ஏற்றுக்கொண்டார் மற்றும் கேடோ மற்றும் சிபியோவைப் பின்தொடர்வதற்காக ஆப்பிரிக்காவுக்குச் சென்றபோது அவரை கவுலின் (தற்போதைய பிரான்சு) ஆளுநராக மாற்றினார். கிமு 45ல், சீசர் அடுத்த ஆண்டு நகர்ப்புற நீதிபதியாக பணியாற்ற புருடசைபரிந்துரைத்தார்.

மேலும் கிமு சூன் 45ல், புருடஸ் தனது மனைவியை விவாகரத்து செய்து, தனது உறவினரான, கேட்டோவின் மகளான போர்சியா காடோனிசை மணந்தார்..[3][4]சிசரோவின் கூற்றுப்படி, புருட்டஸ் கிளாடியாவிடமிருந்து விவாகரத்து செய்ததற்கான சரியான காரணத்தைக் கூறத் தவறினர்.இந்த திருமணம் புருடசுக்கும் அவரது தாயாருக்கும் இடையே பிளவை ஏற்படுத்தியது.

ஜுலியஸ் சீசரை கொல்ல சதி

[தொகு]

ஜுலியஸ் சீசர் வாழ்நாள் முழுவதும் சர்வாதிகாரியாக நியமிக்கப்பட்ட பிறகு பல செனட்டர்கள் அவரது வளர்ந்து வரும் அதிகாரத்தைப் பற்றி அஞ்சத் தொடங்கினர்.[7] சீசருக்கு எதிரான சதியில் சேர புருடஸ் வற்புறுத்தப்பட்டார்.இறுதியில் புருடஸ், சீசருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார்.[5][6] சீசரின் மனைவி மட்டுமே சதி பற்றி அறிந்த ஒரே பெண்.[7][8]

அதே ஆண்டு மார்ச் மாதத்தில் சீசரை செனட் சபையில் வைத்து கொல்ல சதிகாரர்கள் திட்டமிட்டனர். அன்று, சீசர் செனட் சபைக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது, ஏனெனில் அவரது மனைவி அவரை செல்ல வேண்டாம் என்று சமாதானப்படுத்த முயன்றார். சதித்திட்டம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக சதிகாரர்கள் பயந்தனர்.[14] இருப்பினும், புரூடஸ் தொடர்ந்து செனட்டில் சீசருக்காகக் காத்திருந்தார். மேலும் ஒரு தூதுவர் அவரை வெளியேறச் செய்யும் செய்தியைக் கொண்டு வந்தபோதும் அவர் தொடர்ந்து இருந்தார்.. சீசர் இறுதியாக செனட்டிற்கு வந்தபோது, சதிகாரர்களுடன் புருட்டசும் ஜுலியஸ் சீசரைத் தாக்கிக் கொன்றனர்.[9]

சீசரின் படுகொலைக்குப் பிறகு

[தொகு]

சீசரின் படுகொலைக்குப் பிறகு, செனட் சபை கொலையாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியது. இந்த பொதுமன்னிப்பு சீசரின் நண்பரும் இணைத் தூதருமான மார்க் ஆண்டனியால் முன்மொழியப்பட்டது. இருந்தபோதிலும், மக்களிடையே ஏற்பட்ட சலசலப்பு, புரூட்டஸ் மற்றும் சதிகாரர்களை ரோமை விட்டு வெளியேறச் செய்தது. புருடஸ் கிமு 44 முதல் 42 வரை கிரீட் தீவில் குடியேறினார்.

கிமு 43ல் சீசரின் மகன் அகஸ்ட்டஸ் செனட் சபை மூலம் தூதரகத்தைப் பெற்ற பிறகு, ஜூலியஸ் சீசரை படுகொலை செய்தவர்களை கொலைகாரர்கள் மற்றும் அரசின் எதிரிகள் என்று அறிவித்தது அவரது முதல் நடவடிக்கைகளில் ஒன்றாகும்.[18] ஆக்டேவியன் மீது கோபமடைந்த சிசெரோ, ஆக்டேவியன் மற்றும் மார்க் ஆண்டனியின் படைகள் பிளவுபட்டதை விளக்கி புரூட்டசுக்கு ஒரு கடிதம் எழுதினார். மார்க் ஆண்டனி தனக்கு ஆளுநர் பதவியை விரும்பிய கவுல் மாகாணத்தை முற்றுகையிட்டார். இந்த முற்றுகைக்கு விடையிறுக்கும் வகையில், அகஸ்ட்டஸ் தனது படைகளைத் திரட்டி, தொடர்ச்சியான போர்களில் ஈடுபட்டார். அதில் மார்க் ஆண்டனி தோற்கடிக்கப்பட்டார்.[19] அகஸ்டசுக்கு ரோமைப் பாதுகாக்கும் அளவுக்கு பெரிய இராணுவம் இல்லை என்று கேள்விப்பட்டவுடன், புருட்டஸ் தனது துருப்புக்களைத் திரட்டினார். அது மொத்தம் 17 படையணிகளைக் கொண்டிருந்தது.

புருட்டஸ் ரோம் செல்லும் வழியில் இருப்பதாக அகஸ்டஸ் கேள்விப்பட்டபோது, அவர் மார்க் ஆண்டனியுடன் சமாதானம் செய்து கொண்டார்..[20] அவர்களின் படைகள், மொத்தம் சுமார் 19 படையணிகள், புருட்டஸ் மற்றும் காசியஸை சந்திக்க அணிவகுத்துச் சென்றது. பிலிப்பி போரில் இரு தரப்பினரும் சந்தித்தனர். முதலாவது போர் கிமு 3 அக்டோபர் 42 அன்று நடைபெற்றது. இதில் புருட்டஸ், ஆக்டேவியனின் படைகளை தோற்கடித்தார். காசியஸ் மார்க் ஆண்டனியால் தோற்கடிக்கப்பட்டார். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டார். ஏனெனில் அவர் புருட்டசும் தோல்வியடைந்தார் என்று நினைத்தார்.

இரண்டாவது போர் கிமு 42 அக்டோபர் 23 அன்று நடைபெற்றது. இப்போரில் புருட்டஸ் தோல்வி அடைந்தார். தோல்விக்குப் பிறகு, அவர் நான்கு படைகளுடன் அருகிலுள்ள மலைகளுக்கு தப்பி ஓடினார். தனது இராணுவம் தோற்கடிக்கப்பட்டதையும், தான் கைப்பற்றப்படுவதையும் அறிந்த புருட்டஸ் தற்கொலை செய்து கொண்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Broughton 1952, ப. 576
  2. Europius, Abridgement of Roman History
  3. Plutarch, Marcus Brutus, 13.3.
  4. Cicero. Brutus. 77, 94
  5. Cassius Dio, Roman History, 44.12.3.
  6. Cassius Dio, 44.13.1.
  7. Cassius Dio, 44.13.
  8. Plutarch, Marcus Brutus, 14.4
  9. ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்டது எப்படி?