உள்ளடக்கத்துக்குச் செல்

நிழல் (ஒளியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிழல் என்பது ஓா் ஒளிமூலத்திலிருந்து வரும் ஒளிக்கதிா்கள் ஒளிபுகாப் பொருளால் தடைப்படும் பொழுது ஏற்படுகின்ற ஓா் இருண்ட பகுதியாகும்.[1][2][3]

நிழல்கள் ஏற்படும் விதம்

[தொகு]
நிழல்கள் ஏற்படும் விதம்

AB என்ற ஒரு ஒளிபுகாப் பொருள், ஒரு மின்னிழை விளக்கிற்கும், சுவா்ப்பரப்பிற்கும் இடையே வைக்கப்படுகிறது. A,B க்கு இடையே விழும் கதிா்கள் AB என்ற பொருள் வழியே செல்ல முடிவதில்லை. AB க்கு பின்புறம், சுவரின் பரப்பு ஒளியைப் பெறுவதில்லை. சுவரின் மற்ற பகுதிகள் ஒளியைப் பெறுகின்றன. எனவே, பொருளின் A1 B1 என்ற நிழல் சுவா்ப்பரப்பில் ஏற்படுகின்றது. நிழலின் உருவமானது, பொருளின் உருவத்தையே பெற்றுள்ளது.

நிழல்கள் உருவாகும் விதம் - கருநிழல் மற்றும் புறநிழல்

[தொகு]

ஒரு புள்ளி ஒளிமூலத்திலிருந்து வரும் ஒளியின் பாதையில் ஓா் ஒளிபுகாப் பொருளை வைத்தால், திரையில் ஏற்படும் நிழல் ஒரே சீரான கருமையான நிழலாக இருக்கும். இதுவே கருநிழல் எனப்படும்.

ஓா் அகன்ற அல்லது பெரிய ஒளி மூலத்திலிருந்து வரும் ஒளியின் பாதையில் ஓா் ஒளிபுகாப் பொருள் வைக்கப்பட்டால், திரையில் கருநிழல் பகுதி ஏற்படுகிறது. இப்பகுதியில் ஒளி வந்து சேருவதில்லை. கருநிழல் பகுதியைச் சுற்றிலும் ஓரளவு ஒளியுள்ள வளைய நிழல் பகுதியைக் காணலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "March of the moons". Archived from the original on 28 July 2015. பார்க்கப்பட்ட நாள் 24 June 2015.
  2. NASA Science Question of the Week. Gsfc.nasa.gov (7 April 2006). Retrieved on 26 April 2013.
  3. "Young astronomer captures a shadow cast by Jupiter : Bad Astronomy". Blogs.discovermagazine.com. 18 November 2011. Archived from the original on 2 July 2013. பார்க்கப்பட்ட நாள் 27 May 2013.