செப்டம்பர் 22
Appearance
<< | செப்டம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMXXIV |
செப்டம்பர் 22 (September 22) கிரிகோரியன் ஆண்டின் 265 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 266 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 100 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1586 – நெதர்லாந்து, சூட்பென் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் எசுப்பானியர் ஆங்கிலேய-இடச்சுப் படைகளை வென்றனர்.
- 1692 – ஐக்கிய அமெரிக்காவில் சூனியக்காரர்களின் கடைசித் தொகுதியினர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1711 – டஸ்கரோரா பழங்குடிகள் அமெரிக்கா, வட கரொலைனாவில் பாம்லிக்கோ ஆற்றுப்படுகையில் குடியேற்றவாசிகளைத் தாக்கி 130 பேரைக் கொன்றனர்.
- 1761 – மூன்றாம் ஜார்ஜ் பெரிய பிரித்தானியாவின் அரசராகவும், சார்லொட் அரசியாகவும் முடிசூடினர்.
- 1784 – அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் உருசியா தனது குடியேற்றத்தை ஆரம்பித்தது.
- 1789 – ரிம்னிக் சண்டையில் உதுமானியப் படைகளைத் தோற்கடித்த அலெக்சாந்தர் சுவோரொவ் உருசிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
- 1857 – உருசியாவின் லெபோர்ட் என்ற கப்பல் பின்லாந்து வளைகுடாவில் இடம்பெற்ற சூறாவளியில் சிக்கி மூழ்கியதில் 826 பேர் உயிரிழந்தனர்.
- 1896 – பிரித்தானியாவின் அரச வம்சத்தில் விக்டோரியா மகாராணி அவருடைய தாத்தா மூன்றாம் ஜார்ஜை விட அதிக காலம் ஆட்சியில் இருந்த பெருமையைப் பெற்றார்.
- 1914 – செருமனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் இரவு 9:30 மணிக்கு சென்னைத் துறைமுகத்தையும் மற்றும் நகரப் பகுதிகளையும் குண்டுவீசித் தாக்கியது. மொத்தம் 130 குண்டுகளை அது வீசியது.
- 1934 – வேல்சில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 266 பேர் கொல்லப்பட்டனர்.
- 1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்து முற்றுகையின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக செருமானிய-சோவியத் இராணுவ அணிவகுப்பு பிரெஸ்த்-லித்தோவ்சுக் என்ற இடத்தில் இடம்பெற்றது.
- 1941 – யூதர்களின் புத்தாண்டில் உக்ரைனின் வின்னிட்சியா நகரில் 6,000 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் முதல் நாட்களில் கொல்லப்பட்ட 24,000 யூதர்களில் உயிர் தப்பியோராவர்.
- 1960 – மாலிக் கூட்டமைப்பில் இருந்து செனிகல் விலகியதை அடுத்து சுடானியக் குடியரசு மாலி எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- 1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் காஷ்மீர் தொடர்பாக இடம்பெற்ற போர் ஐநாவின் போர் நிறுத்த அழைப்பை ஏற்று முடிவுக்கு வந்தது.
- 1970 – மலேசியாவின் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தனது பதவியில் இருந்து விலகினார்.
- 1975 – ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ஜெரால்ட் ஃபோர்ட் கொலை முயற்சியில் தப்பினார்.
- 1980 – ஈராக் ஈரானை முற்றுகையிட்டது.
- 1993 – அலபாமாவில் தொடருந்து ஒன்று பாலம் ஒன்றில் தடம் புரண்டதில் 47 பயணிகள் உயிரிழந்தனர்.
- 1993 – ஜோர்ஜியாவின் பயணிகள் விமானம் ஒன்று சுகுமி என்ற இடத்தில் தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 108 பேர் கொல்லப்பட்டனர்.
- 1995 – அலாஸ்காவில் போயிங் விமானம் ஒன்று பறவைகள் தாக்கியதன் காரணமாக வீழ்ந்ததில் அதில் அபயணம் செய்த அனைத்து 24 பேரும் உயிரிழந்தனர்.
- 1995 – நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை: யாழ் நாகர்கோயில் பாடசாலை மீது இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் 34 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
- 2013 – பாக்கித்தான், பெசாவர் நகரில் கிறித்தவத் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 75 பேர் கொல்லப்பட்டனர்.
- 2014 – நாசாவின் மாவென் விண்கலம் செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது.
பிறப்புகள்
- 1791 – மைக்கேல் பரடே, ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1867)
- 1834 – இராபர்ட் புருசு ஃபூட், பிரித்தானிய நிலவியலாளர், தொல்லியலாளர் (இ. 1912)
- 1863 – அலெக்சாண்டர் எர்சின், சுவிட்சர்லாந்து மருத்துவர், நுண்ணியலாளர் (இ. 1943)
- 1869 – வலங்கைமான் சங்கரநாராயண ஸ்ரீநிவாஸ சாஸ்திரி, இந்திய அரசியல்வாதி, நிர்வாகி, கல்வியாளர் (இ. 1946)
- 1869 – முகமது ஹபிபுல்லா, இந்திய அரசியல்வாதி, திருவாங்கூர் திவான் (இ. 1948)
- 1916 – விந்தன், தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 1975)
- 1930 – பி. பி. ஸ்ரீநிவாஸ், தென்னிந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகர் (இ. 2013)
- 1930 – தி. ச. சின்னத்துரை, சிங்கப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி (இ. 2016)
- 1931 – அசோகமித்திரன், தமிழக எழுத்தாளர் (இ. 2017)
- 1933 – அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர், நாடகக் கலைஞர்
- 1934 – டிமோதி இம்பவன்றா, பிஜி அரசியல்வாதி (இ. 1989)
- 1939 – ஜூன்கோ டபெய், சப்பானிய மலையேறி
- 1950 – பவன் குமார் சாம்லிங், சிக்கிம் மாநிலத்தின் 5வது முதலமைச்சர்
- 1959 – சோல் பெர்ல்மட்டர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர்
- 1962 – மார்ட்டின் குரோவ், நியூசிலாந்துத் துடுப்பாளர் (இ. 2016)
- 1970 – கிளாடிசு பெரெசிக்லியன், ஆத்திரேலிய அரசியல்வாதி
இறப்புகள்
- 1539 – குரு நானக், சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்தவர் (பி. 1469)
- 1828 – சாக்கா சூலு, சூலு பேரரசர் (பி. 1787)
- 1972 – புலவர் குழந்தை, தமிழகத் தமிழறிஞர், புலவர் (பி. 1906)
- 2009 – எஸ். வரலட்சுமி, தென்னிந்திய நடிகை, பாடகி (பி. 1927)
- 2009 – ஆர். பாலச்சந்திரன், தமிழகக் கல்வியாளர், கவிஞர்
- 2013 – டேவிட் ஹண்டர் ஹியூபெல், நோபல் பரிசு பெற்ற கனடிய-அமெரிக்க மருத்துவர் (பி. 1926)
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (பல்காரியா, உதுமானியப் பேரரசிடம் இருந்து 1908)
- விடுதலை நாள் (மாலி, பிரான்சிடம் இருந்து 1960)
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "செப்டம்பர் 22 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்