உள்ளடக்கத்துக்குச் செல்

கோன்பவுங் வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோன்பவுங் வம்சம்
1752–1885
கொடி of கோன்பவுங் அரச மரபு
கொடி
of கோன்பவுங் அரச மரபு
சின்னம்
நிலைபேரரசு
தலைநகரம்சிவெப்போ (1752–1760)
சகையிங் (1760–1765)
இன்வா (1765–1783, 1821–1842)
அமராபுரா(1783–1821, 1842–1859)
மண்டலே (1859–1885)
பேசப்படும் மொழிகள்பர்மியம்
சமயம்
தேரவாத பௌத்தம்
அரசாங்கம்முடியாட்சி
• 1752–1760
அலௌங்பயா (முதல்)
• 1878–1885
திபாவ் மின் (இறுதி)
சட்டமன்றம்ஹலுட்டவ்
வரலாற்று சகாப்தம்துவக்க நவீன காலம்
• நிறுவப்பட்ட ஆண்டு
29 பிப்ரவரி 1752
• ஒன்றிணைந்த பர்மா
1752–1757
• பர்மா -சியாம் போர்கள்
1760–1854
• சீன-பர்மியப் போர்
1765–1769
1824–1826, 1852, 1885
• முடிவுற்ற ஆண்டு
29 நவம்பர் 1885
பரப்பு
1824[1]794,000 km2 (307,000 sq mi)
1826584,000 km2 (225,000 sq mi)
1852470,000 km2 (180,000 sq mi)
1875460,000 km2 (180,000 sq mi)
மக்கள் தொகை
• 1824[1]
3,000,000
நாணயம்கியாத் (1852 முதல்)
முந்தையது
பின்னையது
தவுங்கூ அரச மரபு
ஹந்தவாடி இராச்சியம் மீண்டும் நிறுவப்பட்டது.
மரௌக்கு இராச்சியம்
[[பிரித்தானிய இந்தியா]]
[[பர்மாவில் பிரித்தானிய ஆட்சி]]

கோன்பவுங் வம்சம் (Konbaung dynasty) pronounced: [kóʊɴbàʊɴ kʰɪʔ]), பர்மாவை இறுதியாக 1752 முதல் 1885 வரை ஆண்ட இவ்வரச மரபை முன்னர் அலோம்பர அல்லது அலௌங்பயா வம்சம் என அழைத்தனர். இவ்வரச மரபு நவீன பர்மாவை உருவாக்கியதற்கு முக்கியப் பங்கு வகித்தது. இவ்வரச மரபு தற்கால தாய்லாந்து மற்றும் தற்கால இந்தியாவின் வடகிழக்கு இந்தியாவைக் கைப்பற்றி 100 ஆண்டுகள் ஆண்டது.

1824 -1885 முடிய நடைபெற்ற முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர்களில், இந்த பர்மிய அரச மரபு முதலில் தனது ஆட்சியின் கீழிருந்த அகோம் பேரரசு, மணிப்பூர் இராச்சியம் போன்ற வடகிழக்கு இந்தியப் பகுதிகளை பிரித்தானிய இந்தியாவிடம் இழந்தது.

பின்னர் 1852 - 1853-இல் நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேயப் பர்மியப் போரில், இந்த பர்மியப் பேரரசு ரங்கூன் உள்ளிட்ட கீழ் பர்மாவை ஆங்கிலேயர்களிடம் இழந்தனர். எனவே இருநாடுகளும் யாந்தபு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதன்படி பர்மிய அரசு ஆங்கிலேயர்களுக்கு பெருந்தொகை போர் ஈட்டுத்தொகையாக செலுத்த வேண்டியதாயிற்று.

1885-இல் நடைபெற்ற ஆங்கிலேய-பர்மியப் போரில் இந்த பர்மிய அரச மரபினர் மேல் பர்மாவை ஆங்கிலேயர்களிடம் இழந்தனர். இதனால் பர்மாவில் கோன்பவுங் வம்சத்தின் முடியாட்சி வீழ்ந்தது. 1885-இல் பர்மாவில் பிரித்தானிய ஆட்சி மலர்ந்தது. பர்மா பிரித்தானிய இந்தியாவின் ஒரு மாகாணமாக 1937 முடிய விளங்கியது. பின்னர் பர்மா தனி துணைநிலை ஆளுநரின் கீழ் தனி காலனி நாடானது. 1948-இல் பர்மா பிரித்தானியர்களிடமிருந்து விடுதலை ஆனது.

கோன்பவுங் வம்சத்தின் பர்மாப் பேரரசின் ஆட்சியாளர்கள்

[தொகு]
  1. அலௌங்பயா - (1752 - 1760)
  2. நவுங்தவுக்கி - (1760 – 1763)
  3. சிங்பிஉசின் (1763–1776)
  4. சிங்கு - (1776–1781)
  5. பவுங்கா - 1782
  6. போதவ்பயா (1782–1819)
  7. பாகிய்தாவ் - 1819–1837
  8. தாராவதி - 1837–1846
  9. பாகன் - 1846–1853
  10. மிண்டோன் - 1853–1878
  11. திபாவ் மின்- 1878–1885

இதனையும் காணக

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Harvey 1925, ப. 333.