கூட்டு மதிப்பீடு
கூட்டு மதிப்பீடு அல்லது தொகுத்தறி மதிப்பீடு (Summative assessment/summative evaluation/assessment of learning)[1] என்பது ஒரு கல்வித் திட்டத்தில் பங்கேற்றவர்களை மதிப்பீடு செய்யும் முறைகளுள் ஒன்றாகும். இம்முறையானது, மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் பலனையும், பங்கேற்பாளர்களின் கற்றல் திறனையும் ஒருங்கே மதிப்பிடுவதற்கு ஏற்றவகையில் வடிவவமைக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பங்கேற்பாளர்களின் வளர்ச்சியை சுருக்கமாக உருவாக்கும் முறைசார் மதிப்பீட்டு முறையான, "வளரறி மதிப்பீட்டு"டன் முரண்படுவதுடன் அதைவிடச் சிறந்ததாகவும் கருதப்படுகிறது.[2]
மாணவர்களின் கற்றல் திறனை, அந்த கற்பித்தல் அலகின் இறுதியில், ஒரு கற்றல் திறனளவுகோலுடன் ஒப்பிட்டறிவதே இம்முறையின் நோக்கமாகும். கற்றல் திட்டக் காலம் முழுவதுமாக அல்லது ஒரு குறிப்பிட்ட பாடத்தலைப்புகள் முடிந்த பின்னர் என மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாணவர்களின் செயற்திறனுக்கு ஏற்ப மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன. கூட்டு மதிப்பீட்டு முறையின்படி வழங்கப்படும் மதிப்பெண்கள், விழுக்காடுகளாகவோ, தேறியவர்/தேறாதவர் என்றோ அல்லது வேறெந்தவொரு தர அளவீட்டு வடிவமாகவோ இருக்கலாம். கூட்டு மதிப்பீட்டிற்கு ஒரு உயர்வான மதிப்புள்ளது.
ஆறு மாதங்களுக்குப் பிறகு பள்ளிகளில் நடைபெறும் இடைப்பருவத் தேர்வுகள், இறுதி திட்டப்பணி, தோ்வு மற்று வேறுவகையானவை உட்பட்டவை கூட்டு மதிப்பீட்டு முறைக்கு எடுத்துக்காட்டுகளாகும். கல்லூரிகளில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்குப் பிறகு நடத்தப்படும் பருவத் தேர்வுகளும் இதற்கு எடுத்துக்காட்டாகும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ What Is The Difference Between Assessment Of And Assessment For Learning?
- ↑ "Formative and Summative Assessments | Poorvu Center for Teaching and Learning". poorvucenter.yale.edu. பார்க்கப்பட்ட நாள் 2022-09-30.
- ↑ R. W. Tyler, R. M. Gagne, & M. Scriven (Eds.) (1967). "The methodology of evaluation". Perspectives of curriculum evaluation. Chicago, IL: Rand McNally. pp. 39–83.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|1=
(help)CS1 maint: multiple names: authors list (link)