கிடில்
வலைத்தள வகை | தேடல் பொறி |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம் |
பதிவு செய்தல் | No |
வெளியீடு | 2014 |
அலெக்சா நிலை | 15,589 (உலக அளவில், ஏப்ரல் 2020) |
உரலி | www |
கிடில்(Kiddle) என்பது குழந்தைகளுக்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கூகிலீண் ஒரு தேடல் எந்திரம் ஆகும்.
காரணம்
[தொகு]பொதுவாக ஒரு தேடலின் போது அதற்கு சற்றும் தொடர்பில்லாத ஆபாச விளம்பரங்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். எனவே இத்தகைய நிகழ்வுகளால் குழந்தைகள் அதிகம்பாதிக்கப்படுவதாக கருதப்பட்டு கூகிள் பாதுகாப்பான தேடல் ஒன்றினை நவம்பர் 11,2009ல் அறிமுகம் செய்தது[1].தற்போது முழுக்க குழந்தைகளுக்கான ஒரு தேடல் பொறியாக இது அமைக்கப்பட்டுள்ளது.[2]
பட தேடல்
[தொகு]படங்களைட் தேடுவதற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு தேடுபொறி ஆகும்.ஒரு படத்திற்கான திறவுச் சொற்களோ அல்லது அதற்கான இணையை இணைப்புகளைப் பொறுத்து இதன் தேடல் அமையும்.இதன் முடிவுகள் வடிவம்,மீதரவு போன்றவற்றின் அடிப்படையில் அமைகின்றன.
பட தேடலின் வகைகள்
மீதரவின் மூலம் தேடல்
[தொகு]ஒரு படம் தொடர்பான வார்த்தைகள் தொடர்பாக தேடுதல்.
எடுத்துகாட்டுகள் மூலம் தேடல்
[தொகு]இவை உள்ளடக்கம் சார்ந்த தேடல் எனவும் அழைக்கப்படுகிறது.தேடலின் வண்ணங்கள் மற்றும் வடிவங்களைப் பொறுத்து இது முடிவுளை தருகின்றது.[3]
பாதுகாப்பான தேடல்
[தொகு]ஆபாசம் தொடர்பான எந்த வார்த்தைகளை இதில் தேடினாலும் அதற்கான முடிவுகள் இதில் காண்பிக்கப்படாது என்பது இதன் சிறப்பு ஆகும்.இதன் மூலம் குழந்தைகள் தங்களுக்குத் தேவையான முடிவுகளை மட்டுமே காண இயலும்.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ Pete Lidwell (November 11, 2009). "Locking SafeSearch". Google Official Blog. பார்க்கப்பட்ட நாள் 3 February 2013.
- ↑ 2.0 2.1 http://www.vikatan.com/news/information-technology/93221-kids-search-engine-kiddle-does-not-show-adult-content.html
- ↑ Eakins, John; Graham,Margaret. "Content-based Image Retrieval". University of Northumbria at Newcastle. Archived from the original on 2012-02-05. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
வெளி இணைப்புகள்
[தொகு]https://www.cs.princeton.edu/~funk/tog03.pdf