களஞ்சியம் (திருத்தக் கட்டுப்பாடு)
Appearance
திருத்தக் கட்டுப்பாட்டு மென்பொருளில், களஞ்சியம் (ஆங்கிலம்: Repository) என்பது மூலத்தையும் (கோப்புக்கள், அடைவுகள்) அது தொடர்பான அனைத்து தகவல்களையும் (மாற்ற வரலாற்றுத் தரவுகள், உறுதிப்பாடுகள், ...) கொண்ட ஒரு சேமிப்பு இடமும் அதற்கான தரவுக் கட்டமைப்பும் ஆகும். பொதுவாக இது ஒரு வழங்கியில் வைக்கப்பட்டு இருக்கும்.
ஒரு களஞ்சியத்தில் இருந்து புதிய பதிவுகளையோ, வரலாற்றுப் பதிவுகளையோ ஒருவர் பெற்றுக் கொள்ளலாம். என்ன என்ன மாற்றங்கள் எப்பொழுது யாரால் செய்யப்பட்டன என்று ஆராயலாம். பழைய பதிப்பு நிலைக்கு களஞ்சியத்தை மீட்டெடுக்கலாம்.
திருத்தக் கட்டுப்பாட்டு மென்பொருள் வகையைப் பொறுத்து களஞ்சிய வடிவமைப்பு சற்று வேறுபடலாம்.