ஆகத்து 22
Appearance
<< | ஆகத்து 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMXXIV |
ஆகத்து 22 (August 22) கிரிகோரியன் ஆண்டின் 234 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 235 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 131 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 392 – யூஜீனியசு மேற்கு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார்.
- 1138 – இசுக்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் போர் இடம்பெற்றது.
- 1485 – பொசுவர்த் பீல்டு என்ற இடத்தில் நடந்த போரில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ரிச்சார்டு கொல்லப்பட்டார்.
- 1614 – புனித உரோமைப் பேரரசு, பிராங்க்ஃபுர்ட் நகரில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
- 1639 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னையை) அமைத்தார்கள்.
- 1642 – இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசு ஆங்கிலேய நாடாளுமன்றத்தை "துரோகிகள்" என வர்ணித்தார். இங்கிலாந்து உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
- 1654 – பிரேசிலில் இருந்து 33 யூத அகதிகள் புதிய ஆம்ஸ்டர்டாம் (இன்றைய நியூயோர்க் நகரம்) நகரில் குடியேறினர். ஐக்கிய அமெரிக்காவில் குடியேறிய முதலாவது யூதர்கள் இவர்களாவர்.
- 1711 – கியூபெக்கைத் தாக்க பிரித்தானியா எடுத்த முயற்சியில் அது தனது 8 கப்பல்களை இழந்தது. ஏரத்தாழ 900 படையினர் உயிரிழந்தனர்.
- 1717 – எசுப்பானியப் படைகள் சார்தீனியாவில் தரையிறங்கின.
- 1770 – ஜேம்ஸ் குக் (இன்றைய குயின்சுலாந்தில் உள்ள) பொசெசன் தீவை அடைந்து அதனை பிரித்தானியாவுக்காக உரிமை கோரி ஆத்திரேலியாவின் கிழக்குக் கரை அனைத்துக்கும் நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.
- 1780 – கப்டன் ஜேம்ஸ் குக்கின் ரெசொலூசன் கப்பல் இங்கிலாந்து திரும்பியது. (குக் அவாயில் கொல்லப்பட்டார்).
- 1791 – எயித்தியில் அடிமைகளின் புரட்சி செயிண்ட் டொமிங்கு நகரில் ஆரம்பமானது.
- 1798 – ஐரியக் கிளர்ச்சிக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகள் அயர்லாந்தில் கில்கூமின் நகரில் தரையிறங்கினர்.
- 1827 – பெருவின் அரசுத்தலைவராக ஒசே டெ லா மார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1849 – ஆஸ்திரியா ஆளில்லா ஊதுபைகளை வெனிசு நகரத்துக்கு எதிராக அனுப்பியது. வரலாற்றில் முதலாவது வான் தாக்குதல் இதுவாகும்.
- 1864 – 12 நாடுகள் இணைந்து ஜெனீவாவில் ஆயுத மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு விதிகளை உருவாக்கின.[1]
- 1872 – இலங்கையில் முதலாவது அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டது.
- 1875 – சக்கலின் மற்றும் கூரில் தீவுகள் தொடர்பாக உருசியாவுக்கும் சப்பானுக்கும் இடையில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உடன்பாடு எட்டப்பட்டது.
- 1894 – தென்னாப்பிரிக்காவில் இந்திய வணிகர்களுக்கு எதிராக் காட்டப்படும் பாகுபாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மகாத்மா காந்தி நட்டால் மாகாணத்தில் நட்டால் இந்தியக் காங்கிரசு என்ற அமைப்பைத் தொடங்கினார்.
- 1910 – ஜப்பான்-கொரியா இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடியும் வரையில் கொரியா சப்பானின் ஆட்சியின் கீழ் இருந்தது.
- 1911 – பாரிசில் களவெடுக்கப்பட்ட மோனா லிசா ஓவியம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1932 – தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பிபிசி சோதித்தது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனி படைகள் உருசியாவில் லெனின்கிராட் முற்றுகையை ஆரம்பித்தன.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: செருமனி, யப்பான், இத்தாலி]] மீது பிரேசில் போர் தொடுத்தது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: கிரீட்டில் செருமானியப் படைகள் யூதர்களுக்கு எதிரான இனவழிப்பை ஆரம்பித்தன.
- 1949 – கனடாவில் குவீன் சார்லட் தீவுகளில் 8.1 அளவு நிலநடுக்கம் பதிவாகியது.
- 1953 – பிரெஞ்சு கயானாவில் அமைக்கப்பட்டிருந்த டெவில்சு தீவு என்ற குற்றவாளிகளின் குடியேற்றத் தீவு நிரந்தரமாக மூடப்பட்டது.
- 1962 – பிரெஞ்சு அரசுத்தலைவர் சார்லஸ் டி கோல் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.
- 1968 – திருத்தந்தை ஆறாம் பவுல் கொலம்பியா, பொகோட்டா நகரை வந்தடைந்தார். இலத்தீன் அமெரிக்காவுக்கு திருத்தந்தை ஒருவர் பயணம் செய்தமை இதுவே முடல் தடவையாகும்.
- 1972 – ரொடீசியா அதன் இனெவெறிக் கொள்கை காரணமாக ஒலிம்பிக் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது.
- 1978 – சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி போராளிகள் நிக்கராகுவாவின் தேசிய அரண்மனையைக் கைப்பற்றினர்.
- 1981 – சீன குடியரசில் வானூர்தி ஒன்று வானில் வெடித்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 110 பேரும் உயிரிழந்தனர்.[2]
- 1985 – பிரித்தானியாவின் ஏர்டூர்சு விமானம் மான்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது அதன் இயந்திரம் தீப்பிடித்ததில், 55 பேர் உயிரிழந்தனர்.
- 1989 – நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1991 – சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பிராவ்தா பத்திரிகை மூடப்பட்டது.
- 2004 – நோர்வே, ஒசுலோவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து எட்வர்ட் மண்ச்சின் அலறல், மடோன்னா ஆகிய ஓவியங்கள் துப்பாக்கி முனையில் திருடப்பட்டன.
- 2006 – கிழக்கு உக்ரைனில் உருசிய எல்லையில் புல்கோவோ விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 170 பேரும் உயிரிழந்தனர்.
- 2006 – கிரிகோரி பெரல்மான் புவங்காரே அனுமானத்திற்கான நிறுவல்களைக் கண்டுபிடித்தமைக்காக அவருக்கு பீல்ட்ஸ் பதக்கம் அறிவிக்கப்பட்டது. எனினும் அவர் அப்பதக்கத்தைப் பெற மறுத்து விட்டார்.
- 2012 – கென்யாவில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் உரிமைகள் தொடர்பாக இனக்கலவரங்கள் இடம்பெற்றதில் 52 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1823 – லூயிசு மார்ட்டின், பிரெஞ்சுக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1894)
- 1834 – சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே, அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1906)
- 1877 – ஆனந்த குமாரசுவாமி, இலங்கை வரலாற்றாளர், மெய்யியலாளர், நூலாசிரியர் (இ. 1947)
- 1902 – லெனி ரீபென்ஸ்டால், செருமானிய நடிகை (இ. 2003)
- 1904 – டங் சியாவுபிங், சீன அரசியல்வாதி (இ. 1997)
- 1920 – ரே பிராட்பரி, அமெரிக்க எழுத்தாளர் (இ. 2012)
- 1924 – ஹரிசங்கர் பரசாயி, இந்திய எழுத்தாளர் (இ. 1995)
- 1927 – டி. ஜி. லிங்கப்பா, திரைப்பட இசையமைப்பாளர் (இ. 2000)
- 1955 – சிரஞ்சீவி, இந்திய நடிகர், அரசியல்வாதி
- 1958 – லிவிங்ஸ்ட்ன், தமிழகத் திரைப்பட நடிகர், திரைக்கதை ஆசிரியர்
- 1971 – ரிச்சர்ட் ஆர்மிட்டேச், ஆங்கிலேய நடிகர்
- 1975 – ரோட்ரிகோ சாண்டோரோ, பிரேசில் நடிகர்
- 1978 – ஜேம்ஸ் கோர்டன், ஆங்கிலேய நடிகர், எழுத்தாளர்
- 1991 – பெட்ரிக்கோ மெக்கெடா, இத்தாலிய கால்பந்து வீரர்
இறப்புகள்
- 1485 – இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு (பி. 1452)
- 1664 – மரியா கூனிட்சு, போலந்து வானியலாளர் (பி. 1610)
- 1818 – வாரன் ஹேஸ்டிங்ஸ், இந்தியாவின் 1வது தலைமை ஆளுநர் (பி. 1732)
- 1904 – கேட் சோப்பின், அமெரிக்க புதின எழுத்தாளர் (பி. 1850)
- 1949 – கஜானான் யஷ்வந்த் சிட்னிஸ், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1900)
- 1967 – கிரிகோரி குட்வின் பிங்கஸ், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1903)
- 1973 – செமியோன் ரூதின், சோவியத் மொழியியலாளர், இந்தியவியலாளர், தமிழறிஞர் (பி. 1929).
- 1982 – ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சீர்திருத்தவாதி (பி. 1914)
- 1986 – சோபா சிங், இந்திய ஓவியர் (பி. 1901)
- 1988 – ந. சஞ்சீவி, தமிழக இன உணர்வாளர், சமுதாயச் சிந்தனையாளர், அறிவியல் கோட்பாட்டாளர் (பி. 1927)
- 1994 – கேரி ஜாஸ்கூர், அமெரிக்க நடிகர் (பி. 1935)
- 2010 – ஏ. கே. வீராசாமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 2011 – யக் லேற்ரன், கனடிய அரசியல்வாதி (பி. 1950)
- 2014 – உ. இரா. அனந்தமூர்த்தி, கன்னட எழுத்தாளர் (பி. 1932)
- 2016 – செல்லப்பன் ராமநாதன், சிங்கப்பூரின் 6வது குடியரசுத் தலைவர் (பி. 1924)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ Pictet, Jean S. (1951), "The New Geneva Conventions for the Protection of War Victims", The American Journal of International Law, 45 (3): 462–475, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/2194544
- ↑ Ranter, Harro. "ASN Aircraft accident Boeing 737-222 B-2603 Miao-Li". aviation-safety.net. பார்க்கப்பட்ட நாள் 2019-08-16.
வெளி இணைப்புகள்
- பிபிசி: இந்த நாளில்
- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்
- கனடா இந்த நாளில் பரணிடப்பட்டது 2012-12-10 at Archive.today