உள்ளடக்கத்துக்குச் செல்

அக்டோபர் 2010 சுமாத்திரா நிலநடுக்கம்

ஆள்கூறுகள்: 3°27′50″S 100°05′02″E / 3.464°S 100.084°E / -3.464; 100.084
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்டோபர் 2010 சுமாத்திரா நிலநடுக்கம்
நாள்14:42:22, அக்டோபர் 25, 2010 (UTC) (2010-10-25T14:42:22Z)
நிலநடுக்க அளவு7.7 Mw
ஆழம்12.8 மைல் (20.6 கிமீ)
நிலநடுக்க மையம்3°27′50″S 100°05′02″E / 3.464°S 100.084°E / -3.464; 100.084[1][2]
பாதிக்கப்பட்ட பகுதிகள்இந்தோனேசியா
உயிரிழப்புகள்குறைந்தது 113 இறப்புகள், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயினர்[3][4][5]

அக்டோபர் 2010 சுமாத்திரா நிலநடுக்கம் என்பது இந்தோனேசியாவின் சுமாத்திராக் கரையில் 2010 அக்டோபர் 25 இல் இடம்பெற்ற 7.7 அளவு[1] நிலநடுக்க நிகழ்வைக் குறிக்கும். இது உள்ளூர் நேரப்படி இரவு 09:42 மணிக்கு (14:42 UTC) இடம்பெற்றதாக ஐக்கிய அமெரிக்க நிலவியல் கணிப்பு தெரிவிக்கிறது. சுமாத்திராவில் மென்டவாய் தீவுகளுக்கு அருகே பெங்கூலுவுக்கு மேற்கே 240 கிமீ தூரத்தில் இந்நிலநடுக்கம் பதிவாகியது. இதன் ஆழம் 20.6 கிமீ ஆகும்[6][7].

சுனாமி எச்சரிக்கையை இந்தோனேசிய காலநிலை அவதானிப்பு நிலையம் விடுத்தது[8]. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தின் அறிக்கையின்படி இந்நிலநடுக்கம் "குறிப்பிடத்தக்களவு" ஆழிப்பேரலையைத் தோற்றுவித்துள்ளது[9]. மென்டவாய் தீவுகளில் உள்ள சுற்றுலா மையத்தில் இரண்டு படகுகள் மோதி விபத்துக்குள்ளானது[10].[11]. குறைந்தது 113 பேர் இறந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது[12], மேலும் 500 இற்கும் அதிகமானோரைக் காணவில்லை[13]. முண்டெய் என்ற கிராமத்தில் 80 விழுக்காடு கட்டடங்கள் சேதமடைந்தன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Magnitude 7.5 – KEPULAUAN MENTAWAI REGION, INDONESIA". earthquake.usgs.gov. USGS. Archived from the original on 2010-10-28. பார்க்கப்பட்ட நாள் 2010-10-26.
  2. "Google Maps". maps.google.com. Google. பார்க்கப்பட்ட நாள் 2010-10-26.
  3. Creagh, Sunanda. "Reuters". Reuters. பார்க்கப்பட்ட நாள் 2010-10-26.
  4. "Xinhua". News.xinhuanet.com. பார்க்கப்பட்ட நாள் 2010-10-26.
  5. Andy Saputra (2010-10-26). "At least 112 dead, more than 500 missing after Indonesia quake". cnn.com. CNN. பார்க்கப்பட்ட நாள் 2010-10-26.
  6. "BBC News – Major earthquake strikes off Indonesia". bbc.co.uk. BBC. 2010-10-25. பார்க்கப்பட்ட நாள் 2010-10-26.
  7. msnbc.com staff and news service reports (2010-10-25). "Major quake hits Indonesia - World news - Asia-Pacific". msnbc.com. MSNBC. பார்க்கப்பட்ட நாள் 2010-10-26.
  8. "Tsunami warning relaxed after Indonesia quake". Reuters. பார்க்கப்பட்ட நாள் 2010-10-26.
  9. http://www.weather.gov/ptwc/text.php?id=indian.2010.10.25.165759
  10. "Tsunami hits Indonesia: report – Yahoo!7". Au.news.yahoo.com. பார்க்கப்பட்ட நாள் 2010-10-26.
  11. 23 people are dead, including nine Australians பரணிடப்பட்டது 2012-10-22 at the வந்தவழி இயந்திரம் 26 October 2010
  12. "Indonesia tsunami kills 113; scores more missing". Huffingtonpost.com. பார்க்கப்பட்ட நாள் 2010-10-26.
  13. "Indonesia tsunami kills 113; scores more missing – Yahoo! News". News.yahoo.com. Archived from the original on 2010-10-27. பார்க்கப்பட்ட நாள் 2010-10-26.